சென்னை திருவான்மியூர் ஹோட்டலில் 13 வயசு சிறுமியுடன் 17 வயசு சிறுவன்! விசாரணையில் பகீர் தகவல்கள்
சென்னை: சென்னை திருவான்மியூரில், ஒரு விடுதியில் 13 வயது சிறுமியை அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வயது சிறுவனை போலீஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை ஈசிஆர் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பொத்தேல் நகரில் பாட்டியுடன் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய பாட்டி, சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நீலாங்கரை காவல் நிலையத்தில் பாட்டி புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பள்ளி அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த மாணவி சுமார் ஒரு மணி நேரம் ஒரு சிறுவனுடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் செல்போன் எண்ணை போலீஸார் தேடி கண்டுபிடித்தனர்.
அப்போது அந்த சிறுவன் திருவான்மியூர் அருகே ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்ற போது அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பெற்றோர் இல்லாத அந்த சிறுமியை செல்போன் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் வளர்த்து வந்ததாக தெரிகிறது.
குடும்ப சூழலுக்காக அவர் வீட்டு அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சிறுமி பார்ட் டைம் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு, பிறகு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாட்டியின் மேல் உள்ள கோபத்தால், சிறுவனை சிறுமி மூளைச் சலவை செய்துள்ளார்.
அதில் நாம் எங்காவது போய் திருமணம் செய்து கொண்டு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என அழைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என சிறுவனுடன் பணிபுரிந்த ஒருவரிடம் கேட்ட போது அவர் இருவரையும் காலையில் ரயில் ஏற்றி அனுப்பி வைக்க உதவி செய்ததும் தெரியவந்தது.
சிறுமியை மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வட மாநில சிறுவனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications