Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தகுதி நீக்க எம்எல்ஏக்களை குற்றாலத்தில் தங்க வைக்க முடிவு.. டிடிவி தினகரன் அதிரடி பிளான்!

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்கும்படி டிடிவி தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அக்.24ல் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு- வீடியோ

    சென்னை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்கும்படி டிடிவி தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார்.

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டது. கடந்த வருடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர்.

    18 disqualified MLAs are adviced to stay in Courtallam by TTV Dinakaran

    இதனால் கொறடா மூலம் இவர்கள், எல்லோரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து முடிந்து இந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் அனைவரும் குற்றாலத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார்.

    [நாங்க இருக்கோம்.. சசிகலா அணிக்கு திடீர் தூது விடும் பாஜக.. தமிழக அரசியலில் பரபரப்பு ]

    தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ள நிலையில் தினகரன் இந்த ஏற்பாடு செய்துள்ளார். 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களையும், 3 ஆதரவு எம்எல்ஏக்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்க தினகரன் அறிவுறுத்தி இருக்கிறார்.

    நேற்று தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலைதான் டிடிவி தினகரன் சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்தித்தார். அதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் தமிழக அரசியல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+