நாங்க இருக்கோம்.. சசிகலா அணிக்கு திடீர் தூது விடும் பாஜக.. தமிழக அரசியலில் பரபரப்பு
Recommended Video

டெல்லி: சசிகலா அணியுடன் பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் நெருக்கம் காட்ட முயன்று வருவது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியாகியது. பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 வருட சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தனித்துவிடப்பட்ட சசிகலா டீம்
முதல்வர் பதவியில் அமர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சசிகலா செய்துவந்த நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த அரசியல் மாற்றத்தின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு வந்தார். இதன் பிறகு தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை தங்கள் அணியுடன் இணைந்து கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் சசிகலாவால் கட்சிக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்ட தினகரன் தனித்துவிடப்பட்டுள்ளார். அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
["தலைவர்" ரஜினி நேற்று அப்படிக் கூறினாரா.. இன்று "அண்ணன்" என்ன சொல்லியிருக்கார் பாருங்க!]

சசிகலா அணிக்கு எதிர் நிலைப்பாடு
எடப்பாடி பழனிச்சாமி அணியுடன், தங்கள் அணியில் இணைத்துக் கொள்வதற்கு பிரதமர் மோடி வலியுறுத்தியதாக ஓ.பன்னீர்செல்வம் முன்பு ஒருமுறை, மேடைப்பேச்சு ஒன்றில் தெரிவித்தார். இந்த இணைப்புக்கு பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக அதுவரை யூகங்கள் வெளியாகி வந்த நிலையில் அதை பன்னீர்செல்வத்தின் பேச்சு உறுதி செய்தது. இதன் மூலம் சசிகலா அணிக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக எடுத்திருந்ததும் அம்பலமானது.

பாஜக முயற்சி
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து, சசிகலா அணியினருக்கு பாஜக மேலிடம் தூதுவிட்டு வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி-பன்னீர்செல்வம், தினகரன் என, அதிமுக பிரிந்து இருப்பது அதன் ஓட்டு வங்கியை பாதிக்கும் என்று பாஜக நினைக்கிறது. எனவே எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து செயல்படுமாறும் அதற்கு தேவைப்படும் உதவிகளை தாங்கள் செய்து தருவதாகவும் பாஜக மேலிடம் சிறையிலுள்ள சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கும் தூதுவிட்டு வருவதாக டெல்லி மேல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணங்கள் இதுதான்
இவ்வாறு ஒருங்கிணைந்த அதிமுகவுடன், கூட்டணி அமைத்து வரும் லோக்சபா தேர்தலை சந்திப்பது என்பது பாரதிய ஜனதா கட்சி திட்டமாம். இவ்வாறு செய்வதன் மூலமாகத்தான் தமிழகத்தில் கால் பதிக்க முடியும் என்பதும், ரஜினிகாந்தின் கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதும், திமுக தரப்பில் இருந்து தங்களுக்கு பாசிட்டிவ் சிக்னலில் கிடைக்காததும் இதன் பின்னணியில் உள்ள அம்சங்கள் என்கிறார்கள் பாஜகவுக்கு நெருக்கமான சில புள்ளிகள்.

இணக்கமாக போக தயார்
அதேநேரம் அணிகள் இணைந்தால் முதல்வர் பதவி தினகரன் அணிக்கு சென்று விடக்கூடாது என்பதில் எடப்பாடி ஆதரவு தரப்பு உறுதியாக உள்ளது. அதற்கு பதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வெளியான பிறகு அதை பார்த்துக்கொண்டு தேவைப்பட்டால் சபாநாயகரிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெறவும், அதில் இருவருக்கு அமைச்சரவையில் பதவி வழங்குவது என்றும் எடப்பாடி ஆதரவு தரப்பு கூறுகிறதாம்.

தினகரன் முட்டுக்கட்டை
எடப்பாடி தரப்பின் யோசனைக்கு, சசிகலா தரப்பு சம்மதிக்க வேண்டும் என்பதும் பாஜக விரும்புகிறது. ஆனால் இதற்கு தினகரன் தரப்புதான் முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி பன்னீர்செல்வத்திடமும், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி எடப்பாடி பழனிசாமியிடமும் உள்ளது. அதேபோல ஆட்சியிலும் முதல்வராக எடப்பாடியும், துணை முதல்வராக பன்னீர்செல்வமும் உள்ளனர். இப்படி கட்சி, ஆட்சி எதிலுமே முக்கியத்துவம் இல்லாத போது, அணிகள் இணைப்பிற்கு ஏன் சம்மதிக்க வேண்டும் என்பது தினகரன் தரப்பு கேள்வியாக உள்ளதாம். ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கு சிபிஐ வசம் இருப்பதால் இன்னொரு தரப்பை சரிகட்டுவது பாஜக இடத்திற்கு எளிதாக உள்ளது. தினகரன் தரப்பு மட்டும் சரி என்று சொல்லி விட்டால் விரைவிலேயே ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் உதயமாகும் என்கிறது டெல்லி வட்டாரம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications