இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம
டெல்லி: கடந்த ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் நம் நாட்டை ரஷ்யாவின் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் தான் காப்பாற்றியது. இந்த எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு தான் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து தாக்கி அழித்தது. இந்நிலையில் தான் நம் நாட்டுக்கு ரஷ்யாவில் இருந்து புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் வந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு கடந்த ஆண்டு மே மாதம் நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இது இருநாடுகளுக்கும் இடையேயான போராக மாறியது. நம் நாடு தொடுத்த அதிரடி தாக்குதலில் கதறிய பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்காக நம்மிடம் சரணடைந்தது. மே 7 ம் தேதி அதிகாலை தொடங்கிய போர் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது.
இந்த வேளையில் நம் நாடு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், ராணுவதளம், விமானப்படை தளங்கள், ரேடார் அமைப்புகளை அழித்தது. அதேபோல் பாகிஸ்தானும் நம் நாட்டை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியது. இவை அனைத்தும் வானில் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. இதனால் நம் நாட்டுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து நம் நாடு தப்பிக்க முக்கிய காரணம் எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு சிஸ்டம் தான். இது ரஷ்யாவின் தயாரிப்பாகும். நம் நாட்டில் இது ‛சுதர்ஷன சக்ரா' என்று அழைக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நம் நாட்டை நோக்கி ஏவிய ஏவுகணை, ட்ரோன்களை இந்த எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் தான் வானிலேயே இடைமறித்து தாக்கி அழித்தது.
நம் நாட்டிடம் மொத்தம் 3 எஸ் - 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது ரஷ்யா 4வது எஸ் -400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை நமக்கு வழங்கி உள்ளது. ரஷ்யாவில் இருந்து கடல் வழியாக நம் நாட்டுக்கு கப்பலில் நம் நாட்டுக்கு இந்த எஸ் - 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் வந்தடைந்துள்ளது. விரைவில் இது நம் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதன்மூலம் நம் நாட்டின் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்பட உள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை பாகிஸ்தான், சீனா மற்றும் வங்கதேசத்திடம் இருந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் நம் நாட்டின் பாதுகாப்புகள் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2018 ம் ஆண்டில் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மொத்தம் 5 எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு மைப்பு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் கடந்த 2021ம் ஆண்டு கிடைத்தது. தற்போது வரை 3 எஸ் 400நமக்கு கிடைத்துள்ளது. இன்னும் 2 எஸ் 400 சிஸ்டம் வராமல் இருந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் இது தாமதப்பட்டது. இதனை விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ரஷ்யாவிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற ரஷ்யா மீதமுள்ள 2 எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை ஏவுகணை தடுப்பு அமைப்பை 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அதன்படி தற்போது ஒன்று வந்துள்ள நிலையில் இன்னொன்று இந்த ஆண்டு இறுதியில் நமக்கு வழங்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு நம் நாட்டின் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இது 600 கிலோமீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ட்ரோன்களை கண்டுபிடித்து துல்லியமாக வானிலேயே அழிக்கும். எஸ் 400 அமைப்பில் இருந்து விரைந்து செல்லும் ஏவுகணை எதிரி நாடுகளின் போர் விமானம், ட்ரோன்களை வானிலேயே இடைமறித்து அழிக்கும். கடந்த மே மாதம் பாகிஸ்தானின் போர் விமானங்கள், ட்ரோன்கள் இப்படித்தான் வீழ்த்தப்பட்டன.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) மேலும் ஐந்து எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் நம் நாட்டுக்கான எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications