"தலைவர்" ரஜினி நேற்று அப்படிக் கூறினாரா.. இன்று "அண்ணன்" என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
கட்சி குறித்து ரஜினி டிசம்பரில் அறிவிப்பார் என சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பார் என அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
இதோ அரசியலுக்கு வரப்போறேன், வரப்போறேன் என்று பல ஆண்டுகளை கடத்தி வந்த நடிகர் ரஜினிகாந்த் ஒருவழியாக வந்துவிட்டார். ஆனால் அரசியலுக்கு வந்தும் பரபரப்பும், சுறுசுறுப்பும் இன்றி காணப்பட்ட அவரது வருகை சில சமயங்களில் மட்டும் சூடு பிடித்து சென்றது.
[டாப் கியருக்கு மாறும் திமுக.. அடுத்தடுத்து கூட்டங்கள்.. 25ம் தேதி முக்கிய முடிவுகள்?? ]

மக்கள் மன்றங்கள்
ரசிகர் மன்றங்கள் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு, பின்னர் உறுப்பினர் சேர்க்கை, கட்சி கூட்டம், மன்ற நடவடிக்கை என்று செயல்பாடுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறதே தவிர கட்சியை இன்னும் ரஜினிகாந்த் அறிவிக்கவே இல்லை.

முக்கிய அறிவிப்பு
இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் பலமுறை நேரிடையாகவே கேட்டுவிட்டனர். அதற்கெல்லாம் "விரைவில்" என்றே பதிலளித்து வந்தார். நேற்றுகூட பேட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் இதே கேள்விதான் கேட்கப்பட்டது. மேலும் வருகிற 12-ந் தேதி ரஜினி பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் முக்கிய அறிவிப்பு ஏதாவது வெளியிட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்து.

டிசம்பரில் இல்லை
ஆனால் இதற்கு பதிலளித்த ரஜினி, "டிசம்பரில் எனது கட்சி அறிவிப்பு வெளியாகாது. ஆனால் கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத வேலைகள் தயாராக உள்ளது. நேரம், காலம் பார்த்துதான் நான் கட்சி அறிவிப்பை வெளியிடுவேன். மேலும் நாடாளுமன்ற தேர்தல், அறிவிக்கும்போது எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன்" என்றார்.

சத்தியநாராயண ராவ்
இந்நிலையில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ரஜினி அரசியல் கட்சி துவங்குவதற்கு பின்னால் பாஜக இல்லை என தெளிவுபடுத்தினார். மேலும், டிசம்பரில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழப்பம்
இப்படி கட்சி தொடகுவது குறித்து ரஜினி ஒரு பக்கமும், அவரது அண்ணன் மறுபக்கமும் மாறி மாறி கருத்துக்களை கூறியுள்ளதால் ரசிகர்கள் ரொம்பவே குழம்பி போய் உள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications