ரூ.2000 டிஜிட்டல் பரிவர்த்தனை.. சர்வீஸ் சார்ஜுக்கு 18% ஜிஎஸ்டி? நிர்மலா சீதாராமன் தலைமையில் கூட்டம்
சென்னை: டிஜிட்டல் பண பாிவா்த்தனையில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் காா்டுகளை பயன்படுத்தும்போது எம்.டி.ஆா். தொகை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுவது கடந்த 2017க்கு முன்பு வரை வழக்கமாக இருந்தது. ஆனால் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மக்களிடையே ஊக்கப்படுத்தும் விதமாக வரி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் 2000 வரையிலான பரிவர்த்தனைக்கான 2 சதவீதம் சர்வீஸ் சார்ஜ்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016ம் நவம்பர் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 500 மற்றும் 1000 ரூபாயை செல்லாது என்று அறிவித்தது. அதன்பிறகு மொத்த பணமும் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்க தொடங்கியது. ரொக்கத்தில் நடைபெற்று வந்த பணப்பரிவர்த்தனைகள் எல்லாமே டிஜிட்டலுக்கு மாற வேண்டும் என்று முடிவு செய்த மத்திய அரசு, யுபிஐ மூலமும், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செய்யும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையை ஊக்குவித்தது.

இதற்காக 2017ம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிக அளவில் மின்னணு பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசுகளையும் அளித்து பாராட்டியது. அதேபோல் டெபிட் காா்டுகளை பயன்படுத்தி ரூபாய் 2 ஆயிரம் வரை பணபாிவா்த்தனைகளில் ஈடுபடுபவா்களுக்கான கழிவுத் தொகையை அரசே செலுத்தும் என்றும் அப்போது மத்திய அரசு அறிவித்தது. அதன்பிறகு ரொக்க பரிவர்த்தனைகளைவிட, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மின்னல் வேகத்தில் பரிவர்த்தனைகள் அதிகரித்தது. இப்போது மக்கள் கையில் ஒரு ரூபாய் கூட ரொக்கம் இல்லாமல், டிஜிட்டல் மூலமாகவே அனைத்து தேவைகளுக்கும் பணத்தை செலவு செய்ய முடியும் என்கிற நிலை வந்துள்ளது. பெட்டிக்கடை முதல் பெரிய நட்சத்திர ஓட்டல் வரை எல்லா இடங்களும் டிஜிட்டல் மயாகிவிட்டன. இரு தனிநபர்களுமே பணத்தை கையில் வாங்குவதற்கு பதில் டிஜிட்டலில் வாங்க தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் சிஎன்பிசி-டிவி18 ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழியாக ரூ.2,000 வரையிலான சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனை பேமெண்ட்களுக்கு (பிஏக்கள்) விதிக்கப்படும் 2 சதவீதம் சர்வீஸ் சார்ஜ்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்க கவுன்சில் பரிசீலிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பேமெண்ட் அக்ரெகேட்டர்கள் ( payment aggregators ) என்று அழைக்கப்படும் ஏர்டெல் பே, 1பே, அமேசான் பே, சிசி அவின்யூ, டிஜிகோ, ஜொமேட்டோ, டாடா பிளே உள்பட பல்வேறு 'பேமெண்ட் கேட்வே நிறுவனங்கள்' வாடிக்கையாளர்களிடமிருந்து ஆன்லைன் கட்டணங்களை ஏற்றுக் கொள்ளும் வணிகத்தை செய்கின்றன. இவற்றுக்கு அந்நிறுவனங்கள் வசூலிக்கும் 1.5 முதல் 2 சதவீதம் சர்வீஸ் சார்ஜ்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம். எனவே இந்த நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில வருவாய் அதிகாரிகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி பொருத்துதல் குழுவின் கூட்டத்திற்கு பிறகு புதிய வரியை எதிர்கொள்ளக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனினும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. 2000க்கு மேல் மேற்கொள்ளும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்தால் தினசரி குறைந்த மதிப்புள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கையாளும் சிறிய வணிகர்கள் எதிர்மறையாக பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
ஏனென்றால், மத்திய அரசு விதிக்க வாய்ப்பு உள்ள ஜிஎஸ்டி வரியை பணம் செலுத்தும் பேமெண்ட் கேட்வே நிறுவனங்கள் வணிகர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களில் தலையில் சுமத்த வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தற்போதைய நிலவரப்படியே, ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 0.5% முதல் 2% வரை கட்டணத்தை பேமெண்ட் கேட்வே நிறுவனங்கள் வணிகர்களிடம் வசூலிக்கின்றனர். ஆனால் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், அவர்கள் இந்த கூடுதல் செலவை வணிகர்களின் தலையில் கட்டவே வாய்ப்பு உள்ளது,
தற்போது, க்யூஆர் குறியீடுகள், பிஓஎஸ் மெஷின்கள் மற்றும் நெட் பேங்கிங் போன்ற பல்வேறு டிஜிட்டல் பேமெண்ட்டுகளைக் கையாள்வதால், ரூ.2,000க்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு, பேமெண்ட் கேட்வே நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு ரூ.2,000க்கு கீழ் உள்ள பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications