Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் கிட்ட நெருங்கிவிட்டது.. இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.. எனினும் சீட் ஷேரிங் விவகாரங்கள் உச்சகட்டத்தில் உள்ளன.. ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை மிகவும் ரகசியமாகவும், அதே சமயம் மிக தீவிரமாகவும் நகர்த்தி வருகிறது.. இந்த முறை திமுகவின் ஒற்றை இலக்கு, கடந்த முறையை விட அதிக இடங்களில் தனது சொந்த சின்னமான உதயசூரியனில் போட்டியிடுவதுதானாம்.. அதை பற்றின தகவல்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆட்சியை தக்க வைக்க திமுகவும், விட்டதை பிடிக்க அதிமுகவும் முயன்று வருகின்றன.. இதில் 160 முதல் 170 தொகுதிகளில் திமுக நேரடியாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளது.. இது கூட்டணிக் கட்சிகளிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தினாலும், திமுக தனது பிடியில் உறுதியாக இருக்கிறதாம்..

DMK alliance

18ஆ காங்கிரசுக்கு?

இந்த அதிரடி முடிவுக்கு பின்னால் ஒரு வலுவான அரசியல் கணக்கு ஒளிந்துள்ளது.. தமிழகத்தில் புதிதாக உருவெடுத்துள்ள அரசியல் மாற்றங்கள், புதிய கட்சிகளின் வரவு மற்றும் அதிமுகவின் நகர்வுகளை முறியடிக்க, திமுக ஒரு பலமான பெரும்பான்மையை தனித்து நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது..

ஆனால், இந்த மெகா பிளான் கூட்டணிக் கட்சிகளிடையே ஒருவித அலைக்கழிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.. காரணம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் என ஒரு பெரிய பட்டாளமே திமுகவின் நிழலில் தஞ்சம் புகுந்துள்ளன.. கடந்த காலங்களில் தாராளமாக இடங்களை வாரி வழங்கிய திமுக, இந்த முறை ஒவ்வொரு சீட்டையும் மிகவும் செதுக்கி வழங்க முடிவு செய்துள்ளது.

உதயசூரியன் சின்னம்

வழக்கம்போல, சின்னம் தொடர்பான சிக்கல் இந்தத் தேர்தலில் மிக முக்கியமான காரணியாக உருவெடுத்துள்ளது.. மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தனது உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுக தலைமை கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது..

தனிச்சின்னத்தில் போட்டியிட்டால் கிராமப்புறங்களில் வாக்குகள் சிதறக்கூடும் என்பதும், ஆளுங்கட்சியின் சின்னம் வாக்காளர்களிடையே எளிதில் சென்றடையும் என்பதும் திமுகவின் வாதம்.. ஆனால், கட்சியின் தனித்துவத்தை இழக்க நேரிடும் என அஞ்சும் தோழமைக் கட்சிகள், இந்த நிபந்தனையால் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளனவாம்..

மதிமுகவுக்கு வந்த நெருக்கடி?

இந்த சிக்கலில் மதிமுக அதிகமாக சிக்கியுள்ளதாக தெரிகிறது.. மதிமுகவின் அவசரக் கூட்டங்கள் இந்தச் சின்னம் தொடர்பான போராட்டத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.. கடந்த முறையும் மதிமுகவுக்கு இதே சிக்கல்தான் எழுந்தன..

இம்முறை, கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை குறைத்துத் தருவதால் திமுகவுக்கு பாதிப்பு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. உண்மையில், கூட்டணிக் கட்சிகள் குறைவான இடங்களில் போட்டியிடுவது திமுகவின் மொத்த பலத்தை அதிகரிக்கும் என்றே அறிவாலயம் நம்புகிறது..

காரணம், கடந்த காலங்களில் கூட்டணிக் கட்சிகள் நின்ற இடங்களில் வாக்குகள் சிதறிய அனுபவம் திமுகவுக்கு உண்டு.. ஆனால், அதிருப்தியில் உள்ள கூட்டணி கட்சிகளோஇ தேர்தல் களத்தில் முழு வீச்சில் வேலை செய்யாவிட்டால், அது திமுகவின் வெற்றியை பாதிக்கவும் வாய்ப்புள்ளது..

திமுகவின் சாணக்கியத்தனம்

எனவே எப்படி பார்த்தாலும் 2026-ன் வெற்றியானது அறிவாலயத்தின் இந்தச் சாணக்கியத்தனமான சீட் ஒதுக்கீட்டில்தான் அடங்கியுள்ளது.. கூட்டணிக் கட்சிகள் குறைவான இடங்களில் போட்டியிட்டாலும், அவை அனைத்தும் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் மட்டுமே ஸ்டாலினின் கணக்கு முழுமையடையும்..

உதயசூரியன் சின்னம் ஒரு பக்கம் பலமாக இருந்தாலும், தோழமைக் கட்சிகளின் மனநிறைவும் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.. இந்த இட நெருக்கடிக்கு மத்தியிலும் திமுக கூட்டணி மெஜாரிட்டியை பெறுமா என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது..

அதிமுக எடப்பாடி பழனிசாமி 210 சீட்

திமுக ஒரு பக்கம் 200 தொகுதிகளை குறிவைக்க, எடப்பாடி பழனிசாமியோ ஒரு படி மேலே போய், "அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்" என அதிரடியாக முழங்கி வருகிறார்..

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில், 2026-ல் திமுக அரசை ஓட ஓட விரட்டுவோம் என்றும், 210 தொகுதிகளில் வெற்றி என்பது உறுதி என்றும் நம்பிக்கையுடன் பேசி வருகிறார்.. குறிப்பாக, பாமக மற்றும் அமமுக போன்ற கட்சிகளின் வருகை அதிமுகவின் கரத்தை பலப்படுத்தியுள்ளதாக அவர் கருதுகிறார்..

சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிமுகவின் இந்த "210 பிளான் அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திமுகவின் மெகா கூட்டணி கணக்கை, இந்த 210 இடங்கள் மூலம் முறியடிக்க முடியும் என்பதுதான் எடப்பாடியின் தற்போதைய மாஸ்டர் பிளானாக உள்ளது.. இந்த 2 துருவ போட்டியில் யாருடைய கணக்கு தப்பும், யாருடைய வியூகம் வெல்லும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+