வாடகைதாரர்களுக்கு வரி.. கடை வியாபாரிகளுக்கு பாதிப்பில்லை.. திமுகவுக்கு இதே வேலை.. கிளம்பி வந்த பாஜக
சென்னை: வணிக பயன்பாட்டு வாடகைக்கான வரி விதிப்பில் வியாபாரிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக விளக்கமளித்துள்ளது.. அத்துடன் இது குறித்து மாநில அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கிய ஜிஎஸ்டி கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கடந்த மாதம் 10-ந் தேதி முதல், வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறு வணிகர்கள், வருடத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யும் வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.. இந்த தீர்மானத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. இதற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தீர்மானம் ரத்து: இதனிடையே, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், இந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரியும், இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் மதுரையில் வணிகர்கள் முழுநேர கடையடைப்பு நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள்அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.. அத்துடன், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல, மதுரையில் இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அறிவித்திருக்கிறது.
தமிழக பாஜக: இப்படிப்பட்ட சூழலில், வணிக பயன்பாட்டு வாடகைக்கான வரி விதிப்பில் வியாபாரிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக விளக்கமளித்துள்ளது.. இது தொடர்பாக தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:
"வருமான உச்ச வரம்பு ரூ.10 லட்சம் உடையவர்கள் வணிக பயன்பாட்டுக்கு கட்டடங்களை வாடகைக்கு வழங்கியிருந்தால் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று ஏற்கெனவே விதி இருந்தது. இதுவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வருமான உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாடகைதாரர்கள்: இந்த உச்சவரம்புக்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் வாடகையில் வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அவர்களின் வாடகைதாரர்கள் ஜிஎஸ்டி செலுத்துபவராக இருந்தால், அவர்களிடமிருந்து வரி தொகையை வசூலித்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வாடகை தாரர்களும் ஜிஎஸ்டியின் உள்ளீட்டு வரிச்சலுகை மூலம் வாடகை வரியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
அப்படி வாடகைதாரர்கள் ஜிஎஸ்டி செலுத்தாவிட்டால் உரிமையாளர்களே வாடகைக்கான வரியை செலுத்த வேண்டும். அந்தத் தொகையை கட்டட பராமரிப்புக்காக ஏதேனும் செலவு செய்திருந்தால் (ஆர்சிஎம்), வரி செலுத்தும் தொகையில் சமன் செய்து கொள்ளலாம்... இப்படி வாடகை மூலம் அதிக வருவாய் ஈட்டுவோருக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.. இதனால் வாடகை தாரர்களான வணிகர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது..
விளக்கம் வேண்டும்: ஆனால், இதனை தெளிவுப்படுத்த திமுக அரசு மறுக்கிறது. மத்திய அரசு மீது பழிபோடும் மலிவான அரசியலை செய்கிறார்கள்.. எனவே, இது தொடர்பாக மாநில வணிக வரித்துறை அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டத்திலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு கடைகள், அரிசி, பருப்பு, ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டன. வணிகர்களின் இந்த போராட்டத்தால் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல, விருதுநகரில் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை, மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம், விருதுநகர் வியாபார தொழில்துறை
வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் இதுகுறித்து சொல்லும்போது, வாடகை மீதான ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களுக்கு மேலும் பெரிய சுமை ஏற்படும். இதனால் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு உடனே திரும்பி பெற வேண்டும், மேலும் மாகராட்சி பல மடங்கு உயர்த்தியுள்ள சொத்து வரி, குப்பை வரி மற்றும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications