180 வருட ஜெயில்! 12 வயது மகளை நாசம் செய்த தாய்.. சீரழித்த கள்ளக்காதலன்! கேரளாவில் அதிர்ச்சி தீர்ப்பு
சென்னை: பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வரும் நிலையில், குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.. எனினும், பல பெண் குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் இன்னல்களை வெளியே சொல்வதில் தயக்கம் இருப்பதாக தெரிகிறது. இதையெல்லாம் போக்கவும், தைரியமாக புகார்களை சொல்லவும்தான், இலவச சைல்டு லைன் 1098 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லைல்டு லைன் மூலம் புகார் தரப்பட்டு, பெற்ற தாயே கள்ளக்காதலனுடன் சிறை சென்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
சிறுமிகளும், சிறார்களும் சமீப காலமாகவே பாலியல் சீண்டலுக்கு ஆளாகி வருகிறார்கள்.. தெரிந்தவர்கள், உறவினர்கள், நம்பிக்கைக்குரியவர்களிடம் இப்படியான சீண்டலை சிலசமயம் எதிர்கொள்ள நேரிடுகிறது.

இந்த பாலியல் சீண்டல்கள் பள்ளி குழந்தைகளிடையே மிகப்பெரிய உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.
உளவியல் பாதிப்புகள்
இதில், பெண் பிள்ளைகள், வீட்டிலுள்ளவர்கள் கவனத்துடன் காக்க வேண்டியது அவசியமாக உள்ளது.. பெற்றோரிடம் பிள்ளைகள் தங்களது இன்னல்களை தயங்காமல் சொல்ல வேண்டும்.. அல்லது பெற்றோரை காட்டிலும் நம்பிக்கைக்குரிய ஆசிரியர்களிடம் தங்கள் பிரச்சனைகளை மாணவர்கள் சொல்லலாம்.
அல்லது பெண் குழந்தைகள் அனைத்து விஷயங்களையும் தன்னிடம் பகிர்ந்துகொள்ளும், நட்பான சூழலை தாய்மார்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
எனினும், பெண் குழந்தைகள் தங்கள் மனதை குடையும் பிரச்னைகளை, தைரியமாக வெளியே சொல்வதில் இன்னமும் தயக்கம் உள்ளது.
1098 சைல்டு லைன்
அதனால்தான், பள்ளியில், வீடுகளில், வெளியிடங்களில், டியூசன், பொது இடம் என எங்கு தங்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருந்தாலும், 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு சொல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதில் புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவியர்களின் பெயர் எக்காரணம் கொண்டும் வெளியில் தெரிவிக்கப்படாது. பெயரை தெரிவிக்காமலேயே புகார் பதிவு செய்யலாம்.
புகாரை பெறப்பட்டதுமே, அதிகாரிகள் உரிய தகவல் தெரிவித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள். இந்த 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு சொல்லலாம். CHILDLINE 1098 என்பது இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.
கேரளா கள்ளக்காதலர்கள்
அந்தவகையில் கேரள மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திருவனந்தபுரத்தை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு, 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்..
இந்நிலையில், பாலக்காட்டை சேர்ந்த 36 வயதான நபர், தாயிடம் அறிமுகமாகவும், அது கள்ள உறவாக வளர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து, தன் மகளையும் அழைத்து கொண்டு, கள்ளக்காதலனுடனேயே சேர்ந்து வாழ ஆரம்பித்தார் அந்த பெண்.
அப்போது 12 வயது சிறுமியை மிரட்டி, அந்த கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது... ஒரு வருடமாகவே சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து செய்து வந்ததுடன், சிறுமிக்கு மதுபானம் தந்தும், ஆபாச படங்களை காண்பித்தும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கு பெற்ற தாயும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
இதை பற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக கள்ளக்காதல் ஜோடி சிறுமியை மிரட்டியிருக்கிறது.. ஒரு வருடமாக உடலும், மனதும் பாதிக்கப்பட்ட சிறுமி, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்திருக்கிறாள்.. பிறகு தனக்கு நேர்ந்த கொடுமையை வகுப்பு ஆசிரியையிடம் சொல்லி அழுதுள்ளார்.
போக்சோ சட்டம்
இதைக்கேட்டு அதிர்ந்த ஆசிரியை, உடனடியாக சைல்டு லைன் மூலம் தொடர்பு கொண்டு புகார் தந்தார்.. பிறகு மலப்புரம் போலீசுக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இறுதியில் 12 வயது குழந்தையை, தாயின் கள்ளக்காதலன் ஒரு வருட காலம் மிரட்டி பலாத்காரம் செய்தது உறுதியானது.. இதையடுத்து, கள்ள ஜோடியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மஞ்சேரி போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், 33 ஆவணங்கள் இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டது.
180 வருடங்கள் ஜெயில் தண்டனை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஷ்ரப் நேற்றைய தினம் தீர்ப்பு அளித்தார்.. போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறுமியின் அம்மா, அவரது கள்ளக்காதலனுக்கு தலா 180 வருடங்கள் சிறை தண்டனையும், ரூ.11.75 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து கள்ளக்காதலர்கள் இருவருமே தவனூர் ஜெயில்ல் அடைக்கப்பட்டனர்.
பிஞ்சு குழந்தையை நாசம் இருவருக்கும் 180 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications