Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்த ஊரிலேயே IT வேலை! நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பார்க்! முதல்வர் 1800 மெகா சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்லும் உன்னத நோக்கில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்களை தமிழக அரசு மிகச்சிறப்பாக உருவாக்கி வருகிறது.. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று புதிய மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இந்த மூன்று முக்கியத் திட்டங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டினார்.

Mini TIDEL Park Stalin IT Jobs Nellai Virudhunagar Erode

3 மாவட்டங்களில் நவீன பூங்கா

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்கள் சுமார் 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ளன.. அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி கிராமத்தில் 39.06 கோடி ரூபாயிலும், விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் 38.72 கோடி ரூபாயிலும், ஈரோடு மாவட்டம் கங்காபுரம் கிராமத்தில் 39.87 கோடி ரூபாயிலும் இந்த நவீனப் பூங்காக்கள் கட்டப்படவுள்ளன..

இந்த மினி டைடல் பூங்காக்கள் ஒவ்வொன்றும் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளன.. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், பி.பி.ஓ மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்குத் தேவையான அனைத்து அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளும் இதில் இடம்பெறும்..

நேரடி வேலைவாய்ப்பு

ஒவ்வொரு பூங்காவிலும் தலா 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்தம் 1,800 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு இதன் மூலம் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

ஏற்கனவே விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.. மேலும் திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதிய மாவட்டங்களில் தொடங்கப்படும் இந்தத் திட்டங்கள் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்..

இன்று ஸ்டாலின் அடிக்கல்

இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கமே அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் சொந்த ஊரிலேயே உயர்தரமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகும்.. இதனால் உள்ளூர் பகுதிகளில் சமூக-பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இது பெரும் வலுசேர்க்கும்..

இன்று நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+