நிம்மதி! வணிக சிலிண்டர் விலை ரூ.93 குறைந்தது! வீட்டு பயன்பாடு சிலிண்டர் விலை எப்படி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தலைநகர் சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை குறைந்துள்ளது. இது உணவக உரிமையாளர்களுக்குச் சற்று நிம்மதி தருவதாக உள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் நாள் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து மாற்றியமைக்கப்படும். அதன்படி ஆகஸ்ட் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை குறைந்தது.. உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை ரூ.93 குறைந்தது.. சென்னையில் ரூ.93 குறைந்தது வணிக சிலிண்டர் ரூ.1852க்கு விற்பனை செய்யப்படுகிறது..
சில வாரங்களாகவே காய்கறி விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் அவதிப்படும் நிலையில், அது இவர்களுக்குச் சற்று நிம்மதியாக அமைந்துள்ளது.

வீட்டு பயன்பாடு சிலிண்டர் விலையில் இன்று எந்தவொரு மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications