சென்னையில் திடீரென வெளிவந்த 19 நல்லபாம்பு குட்டிகள்! மொத்த மக்களும் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகே, நல்லபாம்பு குட்டிகளை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் குட்டிகளை மீட்டு பத்திரமான இடத்தில் விட்டிருக்கின்றனர்.

எத்திராஜ் கல்லூரி அருகே குடியிருப்பின் பின்பகுதி ஒன்று பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்திருக்கிறது. அந்த பகுதியில்தான் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பெரிய நல்லபாம்பு ஒன்றை அக்கம் பக்கத்தினர் பார்த்திருக்கின்றனர்.

Cobra

தாய் பாம்பு

பாம்பு குறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். வனத்துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் தாய் நல்லபாம்பை பிடித்து சென்றனர். ஆனால், அப்போது அந்த பாம்பு முட்டையிட்டிருக்கும் விஷயம் யாருக்கும் தெரியவில்லை. எனவே யாரும் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் இன்று காலை பாம்பு பிடிபட்ட பகுதியில் குட்டி பாம்புகள் சில உலாவுவதை மீண்டும் அக்கம் பக்கத்தினர் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

நல்லபாம்பு குட்டிகள்

அவர்கள் வந்து தேடியபோதுதான் அங்கு சுமார் 19 குட்டி பாம்புகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கான்கிரீட் தரை பிளவுகளை உடைத்து தோண்டி பார்த்தபோது, அங்கு பொரியாத நிலையில் 20 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதை அனைத்தையும் வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.

நல்லபாம்பு முட்டைகள்

பொதுவாக நல்லபாம்புகள் ஒரே நேரத்தில் 10-30 முட்டைகள் வரை போடும். நல்ல ஆரோக்கியமான பாம்பு, இளம் வயதாக இருக்கிறது எனில்.. அது 45 முட்டைகள் வரைகூட போடும். இந்த முட்டைகளிலிருந்து குட்டி பாம்புகள் வெளியே வர 1.5-2 மாதங்கள் வரை ஆகலாம். பறவைகள் முட்டைகள் மீது அமர்ந்து அடை காப்பதை போல.. பாம்புகள் செய்யாது. பாம்புகள் இயல்பில் குளிர் ரத்த பிரானிகள்.. எனவே தனது உடல் வெப்பத்தை முட்டைகள் மீது கடத்த முடியாது.

இருப்பினும் முட்டைகளை பக்கத்திலிருந்தே பாதுகாக்கும். முட்டையிலிருந்து குட்டிகள் வெளி வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர்.. தாய் பாம்பு அங்கிருந்து நிரந்தரமாக சென்றுவிடும். இப்படி போகும்போதுதான் அக்கம் பக்கத்தினர் கண்களில் பட்டு தாய் பாம்பு மீட்கப்பட்டிருந்தது.

பாம்புகளின் வாழ்வியல்

முட்டைகளை விட்டுவிட்டு போகும் தாய் பாம்பு.. மீண்டும் அந்த இடதுக்கு திரும்பி வரவே வராது. ஒருவேளை பின் நாட்களில் தனது குட்டியை எதிரில் எங்காவது பார்த்தாலும்.. பாசக்கார அம்மா என்று குட்டி பாம்பும்.. வாடா மவனே என்று தாய் பாம்பு கொஞ்சி குலவிக்கொள்ளாது. இரண்டும் பார்த்தும் பார்க்காதது மாதிரி சென்றுவிடும். தாய் பாம்பு ரொம்பவும் பசியாக இருந்து.. இரை எதுவும் கிடைக்கவில்லை எனில்.. குட்டி பாம்பின் கதை முடிந்தது. இதுதான் பாம்புகளின் வாழ்வியல்.

சென்னையில் மீட்கப்பட்ட பாம்புகள் எங்கு விடப்படும்?

வழக்கமாக சென்னையில் மீட்கப்படும் பாம்புகள் அனைத்தும், வேளச்சேரியில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டுவரப்படு, காயங்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர்.. மக்கள் நடமாட்டம் இல்லாத, அடர்ந்த வனப்பகுதியான திருப்போரூர் காடுகள், செங்கல்பட்டு காடுகள் அல்லது நன்மங்கலம் காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விடுவிக்கப்படும். எத்திராஜ் கல்லூரி அருகே மீட்கப்பட்ட தாய் பாம்பும் அப்படிதான் விடப்பட்டது. இப்போது மீட்கப்பட்டிருக்கும் பாம்பு முட்டைகள்.. வனத்துறையினர் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு.. குட்டிகள் வெளியே வந்தவுடன் மற்ற குட்டிகளுடன் சேர்த்து காடுகளில் விடப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+