அவனுடன் தான் போவேன்! 19 வயசு பூமிகாவுக்கு ஆட்டோ டிரைவர் மீது வந்த காதல்... கடைசியில் ஷாக் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகரில், காதலுக்கு பெற்றோர் முட்டுக்கட்டை போட்டதாலும், காதலனுடன் சேர முடியாத விரக்தியாலும் 19 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதங்களைக் கடந்த காதலும், அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பும் ஒரு இளம் உயிரைப் பறித்துள்ள சம்பவம் சோகத்தை மீட்டியுள்ளது. நிஜமாகவே என்னதான் நடந்தது?

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை டவுன் பகுதியில் வசித்து வந்தவர் பூமிகா (19). இவர் தனது குடும்பத்தின் வறுமைச் சூழல் மற்றும் வாழ்வாதாரத்திற்காக அங்குள்ள ஒரு தனியார் டயர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்...

19 year old Bhumika auto driver Bagalkote suicide 19

19 வயசு பூமிகா காதல்

உழைக்கும் வயதிலேயே பொறுப்புகளைச் சுமந்த பூமிகாவுக்கு, அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் டோங்ரிசாப் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அன்றாட பணிகளுக்கு இடையே மலர்ந்த இந்தப் பழக்கம், நாளடைவில் இருவருக்கும் இடையே ஒரு தீவிரமான காதலாக மாறியது. ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்த டோங்ரிசாப்பும், பூமிகாவும் தங்களது எதிர்காலத்தைப் பற்றிய பல்வேறு கனவுகளைக் கண்டுள்ளனர்.

பூமிகா மற்றும் டோங்ரிசாப் 2 பேருமே வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்.. இதுதான் இவர்களது காதலுக்குப் பெரும் தடையாக அமைந்துவிட்டது.. தொடக்கத்தில் இவர்களது காதல் விவகாரம் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று சுற்றித் திரிந்துள்ளனர்.

ஆட்டோ டிரைவர்

சில நேரங்களில், பூமிகாவின் வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில், அவர் தனது காதலன் டோங்ரிசாப்பை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் வீட்டில் தனிமையில் நேரத்தை செலவிட்டதாகவும் தெரிகிறது.

இந்த விவகாரம் பூமிகாவின் பெற்றோருக்கு தெரியவந்தபோது, அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞனை தங்கள் மகள் காதலிப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் பூமிகாவைப் பெற்றோர் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அந்த இளைஞருடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும்படியும், காதலைக் கைவிடும்படியும் அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், பூமிகா தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

ஷாக்கிங் ட்விஸ்ட்

காதலன் டோங்ரிசாப்பை மட்டுமே கல்யாணம் செய்துகொள்வேன் என்று பூமிகா தனது பெற்றோரிடம் பலமுறை வாதிட்டுள்ளார். ஆனால், குடும்ப கவுரவம் மற்றும் மத ரீதியான காரணங்களை கூறி பெற்றோர் திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக பூமிகா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

தன்னால் காதலனுடன் சேர முடியாது என்பதையும், பெற்றோர் அதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதையும் உணர்ந்த பூமிகா, விபரீதமான முடிவை எடுக்கத் துணிந்துவிட்டார்.. சம்பவத்தன்று பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த பூமிகா, தன்னுடைய ரூமில் ஃபேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்ம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், காதலன் டோங்ரிசாப்பிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு இளம் பெண் காதலுக்காகத் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பாகல்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+