Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1974-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் கருணாநிதி நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்து நிறைவேற்றுகிறார்.

தமிழ்நாடு சட்டசபையில் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய முதல்வரான இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் தந்தை கருணாநிதிதான், மாநில சுயாட்சிக்காக இந்திய அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

autonomy tamilnadu dmk stalin

1974-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் தாக்கல் செய்த மாநில சுயாட்சிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்:

மாநில சுயாட்சி பற்றியும் ராஜமன்னார் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துறைகளையும் ராஜமன்னார் குழுவின் அறிக்கையும் இப்பேரவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு பல்வேறு மொழி நாகரீகம், பண்பாடு ஆகியவர்களை கொண்ட இந்திய நாட்டின் உரிமைப்பாட்டை பேணிக் காக்கவும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றி செயல்படவும் மாநில சுயாட்சி பற்றியும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துக்களை மத்திய அரசு ஏற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உரிமை உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய்கிறது என்று தீர்மானத்தை முன்மொழிகிறேன்

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கருணாநிதி பேசுகையில், இன்றைய தினம் மாநில அரசுக்குள்ள வேலை என்ன?

மக்களுக்குச் சோறு போடுவது - வேலை வாய்ப்புத் தருவது- தொழில் நீதியை நிலை நாட்டுவது- சுகாதாரத்தைப் பேணுவது- கல்விச் செல்வத்தை வளர்ப்பது போன்ற எண்ணற்ற வேலைகளைச் செய்ய வேண்டியது மாநில அரசு.

ஆனால், மத்திய அரசின் வேலை என்ன?

நாடக மேடையிலே வருகிற இராஜா, மந்திரியை அழைத்து, 'மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று கேட்பானாம்.
அதுபோல மாதம் ஒரு முறை மாநில மந்திரிகளை, மத்திய மந்திரி தில்லியில் கூட்டி, "பள்ளிக் கூடங்களில் கல்வி எப்படி இருக்கிறது? காலரா நோய் தடுக்கப்பட்டு விட்டதா?" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

- இப்படி தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்புத்தான் இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை!

மக்களின் சுக துக்கங்களோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசு தானே தவிர- மத்திய அரசு அல்ல. மக்கள் மீது அக்கறை இருக்கலாம் மத்திய அரசுக்கு. அது எப்படிப்பட்ட அக்கறை?-

அண்ணா விளக்குகிறார்: "குடிசைப் பகுதியில் தீப்பற்றியதும் மூன்றாவது மாடியிலுள்ள சீமான் ஏதோ புகை தெரிகிறதே, தீ விபத்துப் போலிருக்கிறதே!" என்று கூறுவானே, அதைப் போன்ற அக்கறைதான் மத்திய அரசின் அக்கறை.

ஆனால் குடிசைப் பகுதியில் தீப்பற்றியதும் பதறித் துடிப்பது யார்? அந்தக் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள குடிசைவாசிதான். அதைப்போல் மாநில அரசு தான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியது எனவும் குறிபிட்டார்.

இந்த தீர்மானத்தின் மீது 4 நாட்கள் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. இறுதியில் மாநில சுயாட்சி தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது.

1974-ல் மாநில சுயாட்சி தீர்மானத்தை ஆதரித்தோ 161; எதிர்த்தோர் 23;
நடுநிலை யாரும் வகிக்கவில்லை என்ற அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

1974-ம் ஆண்டு மாநில சுயாட்சி தீர்மானத்தின் போது சபாநாயகராக இருந்தவர் திராவிடர் இயக்க பெருந்தலைவர் புலவர் கோவிந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 50 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+