தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.. இன்று எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது.
அதில் தமிழகத்தில் மேலும் 2,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 7,43,822 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 75,384 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

206 பரிசோதனை மையங்கள்
இதுவரை 1,05,61,722 சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 1,410 ஆண்களும், 924 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 206 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா பலி
இன்று ஒரே நாளில் 2,386 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 7,13,584 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,344 பேராகும்.

மகிழ்ச்சி
இன்று ஒரே நாளில் 74,589 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 1,02,86,295 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18,894 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60 வயது
இதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்கள் 13,793 பேருக்கும் சிறுமிகள் 12,622 பேருக்கும் என மொத்தம் 25073 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,77,033 ஆண்களுக்கும் 2,45,531 பெண்களுக்கும் என மொத்தம் 6,24,597 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 58267 ஆண்களுக்கும் 34543 பெண்களுக்கும் என மொத்தம் 92810 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications