மறைமலை நகரில் ஆண்டுக்கு 2.5 லட்சம் கார் என்ஜின்கள்.. போர்டு நிறுவனத்தின் திட்டம் என்ன?
சென்னை: சென்னையை அடுத்த மறைமலைநகரில் போர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி செலவில் மீண்டும் உற்பத்தியை தொடங்க போகிறது. ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்கள் மட்டும் தயாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 600 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முன்னதாக 2700 பேர் பணியாற்றி வந்தார்கள். முன்பு கார் முழுமையாக தயாரிக்கப்பட்டது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட ஆலையில் வெறும் என்ஜின் மட்டும் தான் தயாரிக்கப்பட உள்ளது. அதுவும் வெளிநாடு ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது.
1990களில் பெங்களூர் பக்கம் ஐடி நிறுவனங்கள் படை எடுக்க, சென்னை பக்கம் அப்படியே ஹோண்டாய், போர்டு , டிவிஎஸ் உள்பட பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் படை எடுத்தன. பெங்களூர் ஐடி நகரமாகவும், சென்னை ஆட்டோ மொபைல் நகரமாகவும் மாற தொடங்கியது அந்த காலகட்டத்தில் தான்.

அந்த வகையில் சென்னை மறைமலை நகர் கீழக்கரணை கிராமத்தில் கடந்த 1990-ம் ஆண்டு போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த கார் ஆலை தான் இந்தியாவின் மிக பெரும் நிறுவனமாக இருந்து வந்தது. இங்கு 2 லட்சம் கார்கள் மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்கள் வரை தயாரிக்கப்பட்டு 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமார் 2,700 பேர் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றி வந்தார்கள். இந்த நிலையில் 2020 வாக்கில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்ததால், அந்த நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு மறைமலைநகரில் தனது உற்பத்தியை நிறுத்தியது.
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த நிறுவனத்தை மீண்டும் செயல்பட வைக்க பல்வேறு முயற்சிகளை செய்தார். கடந்த ஆண்டு, அமெரிக்கா சென்றபோது போர்டு நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேசி, தமிழகத்தில் இந்த நிறுவனம் மீண்டும் செயல்பட வேண்டும். அதற்காக தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து தரும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த ஆலையை தொடங்க போர்டு நிறுவனம், ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இப்போது ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்கள் மட்டும் தயாரிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் போர்டு நிறுவனம் ரூ.3,250 கோடி செலவில் மீண்டும் செயல்பாட்டினை தொடங்குகிறது. அதற்கான ஒப்பந்தம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் இருக்கிறது. கர்நாடகா, தெலுங்கானாவின் பலம் ஐடி துறை என்றால், தமிழ்நாட்டின் பலம் உற்பத்தி சார்ந்த துறையில் வந்த முதலீடுகள் தான். உற்பத்தி துறையில் தமிழ்நாடு மிக வலுவாக இருக்கிறது. அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உற்பத்தி துறையில் கிடைக்கிறது. இதனால் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications