மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது வரும்.. 1.14 கோடி பெண்களுக்காக அமைச்சர் கீர்த்தனா தந்த அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மகளிர் உரிமைத்தொகையை மாசத்துக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவோம் என்று தவெக அமைச்சர் கீர்த்தனா இன்று விருதுநகரில் உறுதியாக தெரிவித்துள்ளார்.. தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பெண்கள் எதிர்நோக்கி காத்திருந்த இந்த அறிவிப்பு, இன்று விருதுநகரில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களிடம் இன்று பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

சிவகாசி தொகுதியில் தவெக சார்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்று புதிய அமைச்சராக பொறுப்பேற்ற கீர்த்தனா, இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு முதன்முறையாக வருகை தந்திருந்தார்..

Magalir Urimai Thogai

அரசு ஆய்வு மாளிகையில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமான வரவேற்பு தந்திருந்தார்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்பட நிறைய முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு புதிய அமைச்சருக்கு வாழ்த்துகளும் மரியாதையும் தெரிவித்திருந்தனர்..

மகளிர் உரிமைத்தொகை உயர்வு

வரவேற்பு முடிந்த கையோடே அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் கீர்த்தனா, பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, கோடிக்கணக்கான தமிழக பெண்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்..

"அமைச்சர்களுக்கான துறைகள் இரு நாள்களில் அறிவிக்கப்படும். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

தவெக தந்த வாக்குறுதிகள்

எப்படிப்பட்ட நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார் என்பது டாஸ்மாக் விஷயத்திலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாங்கள் புதிய ஆட்சி அமைத்துள்ளோம். கடந்த ஆட்சியில் இதுவரை ரூ.10.50 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். என்ன நடந்துள்ளது என்று முதலில் எங்களுக்குத் தெரியவேண்டும். உரிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்தையும் செய்வோம்"

தமிழ்நாட்டில் 1.14 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர் என்பதால், இந்த உயர்வு நிறைவேறும்போது லட்சக்கணக்கான குடும்பங்களில் புன்னகை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.,

சிவகாசி பட்டாசு விபத்துகள்

சிவகாசி பட்டாசு விபத்துகள் நடக்கின்றன, தொழிலாளர்கள் உயிரிழக்கிறார்கள், ஆனால் உரிமையாளர்களும் தொழிலாளர்களும் அதிகாரிகளும் ஒரே மேஜையில் அமர்ந்து பேசிய வரலாறே இதுவரை இல்லை..

அதிகாரிகள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என மூன்று தரப்பினரையும் ஒரே குழுவில் இணைத்து, அவர்களே கலந்துரையாடி சிறந்த முடிவுகளை எடுக்கும் வல்லுநர்கள் குழு சீக்கிரமாக அமைக்கப்படும், இதுவரை முந்தைய எந்த ஆட்சியிலும் இப்படி ஒரு கூட்டமே நடத்தப்படவில்லை. வரலாற்றில் இதுவே முதல் முறை, இனி இந்த தொழிலில் உள்ளவர்களின் குரலாக தவெக அரசு உறுதுணையாக நிற்கும் "

கடைசி 5 வருடமாக சிவகாசி நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகம் பூட்டப்பட்டு, அதன் இருப்பிடமே மக்களுக்கு தெரியாத அளவுக்கு முடங்கிக் கிடந்தது. மக்களின் குறைகளை கேட்க வேண்டிய அலுவலகம் தாளிடப்பட்டு கிடந்தது.. அந்த வலி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும்..

நாங்கள் வந்த உடனே அந்த அலுவலகத்தை திறந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டு தயார் செய்துளளோம்.. இனிவரும் காலங்களில் தொகுதி மக்களின் குறைகளை கேட்கவும் மக்கள் பணிகளை தடையின்றி செய்யவும் இந்த அலுவலகம் 24 மணி நேரமும் திறந்திருக்கும்

சிவகாசி முதல் பெண் எம்எல்ஏ

சிவகாசியின் முதல் பெண் எம்.எல்.ஏ" என்று என்னை பலரும் பாராட்டுகிறார்கள். அந்த பெருமையை விட "சிவகாசியின் சூப்பரான எம்.எல்.ஏ" என்ற பெயரை எடுப்பதே என்னுடைய வாழ்நாள் லட்சியம்,,

கடந்த ஆட்சியில் தமிழகத்தின் மீது ரூ.10.50 லட்சம் கோடி கடன் சுமை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. நிதி நிலைமையை முழுமையாக ஆராய்ந்து வருகிறது. மக்கள் உரிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்" என்று நம்பிக்கையுடன தெரிவித்துள்ளார் கீர்த்தனா.

இதைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு "தவெக தலைவர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அறிவிப்பார், பொறுத்திருந்து பாருங்கள்" என்று பதிலளித்தார் அமைச்சர் கீர்த்தனா,

தொழிலாளர்களின் பாதுகாப்பும் ஆலை உரிமையாளர்களின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் சாத்தியமாகும் என்று இந்த குழு நிரூபிக்கும் என்ற அமைச்சரின் இந்த நம்பிக்கை இப்போது சிவகாசியில் மெல்ல மெல்ல பரவி வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+