24 மணி நேரத்தில்.. அடுத்தடுத்து 2 "சம்பவம்".. ஸ்டாலினின் எதிர்பாராத ஆக்சன் பாதை.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். ஆளுநர் ஆர். என் ரவியுடன் மோதல் நிலவி வரும் நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பல்வேறு விஷயங்களில் இவர்களுக்கு இடையில் கருத்து மோதல் நிலவிக் கொண்டு இருக்கிறது.
ஆளுநர் ஆர். என் ரவி தமிழகம் என்ற வார்த்தை பிரயோகம் பற்றி கூறியது, தமிழ்நாடு, தமிழகம் வேறுபாடு குறித்து கூறியது, சனாதனம் பற்றி பேசியது என்று பல்வேறு விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளன.

4 விஷயங்கள்
முக்கியமாக ஆளுநர் பேசிய 4 விஷயங்கள் பெரிய சர்ச்சையானது. விஷயம் 1 - தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன. ஆளுநர் ஆர். என் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய இந்த விஷயம் குறித்து நடவடிக்கை எடுக்க திமுக புகார் வைக்க உள்ளது. விஷயம் 2 - ஆளுநர் ஆர். என் ரவி முதல்நாள் தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். அவர் இதன் மூலம் சட்டசபை வரம்புகளை மீறியதாக புகார் வைக்க உள்ளது.

என்ன செய்தார்
விஷயம் 3 - ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பயிற்சி விழாவில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, மத்திய மாநில அரசுக்கு இடையில் மோதல் வந்தால் மத்திய அரசு பக்கம் நிற்க வேண்டும் என்று ஆளுநர் கூறியதும் சர்ச்சை ஆனது. ஆனால் மாநில பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநில அரசு சொல்வதை கேட்க வேண்டும் என்பதே விதி. இதற்கு எதிராக ஆளுநர் ரவி பேசியதை பற்றியும் புகார் வைக்க உள்ளனர். விஷயம் 4 - சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவில் பேசிய ஆர். என் ரவி, இந்தியாவின் ஆன்மீக அடையாளம் ராமர். இந்தியாவை இணைத்தது ராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராமர்தான் இந்தியாவை ஆன்மிகம் மூலம் இணைத்தார். சனாதனம் தெற்கில் இருந்துதான் உருவானது என்பதை மறக்க வேண்டாம். சனாதன தர்மம் முக்கியமாக தமிழ்நாட்டில்தான் தொடங்கியது, என்றார்.

ஆக்சன்
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் கடந்த 24 மணி நேரத்தில் இன்று ஆக்சன் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் நேற்று குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது. மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக எம்.பி.க்கள் இந்த புகாரை வழங்கினர். இதில் வியப்பளிக்கும் விஷயம், அந்த புகாரோடு முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது. ஆளுநர் சொந்த கருத்துக்களை பேசுவதாகவும், அரசியல்வாதி போல பேசுவதாகவும் இந்த கடிதத்தில் புகார் வைக்கப்பட்டு உள்ளது.

கடிதம்
அதில், தமிழ்நாடு சட்டசபையில் ஜனவரி 9 அன்று ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத் தொடர் துவங்கியது. இந்த உரைக்கான வரைவினை தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு முன்னதாகவே அனுப்பி அதற்கு அவரது ஒப்புதல்ஜனவரி 7 ல் பெறப்பட்டது. உரையினை இதனடிப்படையில், இந்த அச்சிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் தனது உரையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு உரையிலிருந்த பல பகுதிகளைப் படிக்காமலும் உரையில் குறிப்பிடப்படாத பல புதிய கருத்துகளை இணைத்தும் உரையாற்றினார். சட்டசபையின் தொடக்க நாளில் அவர் நடந்து கொண்ட விதமும், சட்டமன்ற மாண்பினை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதும் காணப்படுகிறது. கவர்னர் உரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டப் பிரிவு 163 (1) -ன்படி கவர்னர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் நடக்கவேண்டுமென்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்கள் இதில் தலையிட்டு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நடப்பதை உறுதிசெய்யவும், அதன் மூலம் மக்களுக்கு மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும், மக்களாட்சித் தத்துவம் செம்மையடையவும் அவருக்கு அறிவுரை வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளார். , இரண்டாவதாக, கவர்னர் என்பவர் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான சார்புநிலையை பொதுவெளியில் எடுத்துக்கொண்டு, பல்லாண்டுகாலமாக பின்பற்றப்பட்டுவரும் நமது மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்கேற்ற வகையில் பணியாற்றுமாறு அறிவுறுத்தவும் ஜனாதிபதியை, முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரண்டாவது ஆக்சன்
ஆளுனர் விவகாரம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் நேற்று சேது சமுத்திர திட்டத்திற்கான அனுமதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றினார். தேசிய அளவில் இந்த திட்டத்தை பாஜகவினர் சிலர் எதிர்க்கிறார்கள். சுப்பிரமணியன் சாமி போன்றவர்கள் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள். நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் அதிரடியாக தீர்மானத்தைத் தாக்கல் செய்து உள்ளார். இந்த தீர்மானம் ஒரு மனதாக வெற்றியும் பெற்றது. கடலுக்கு அடியில் ராமர் பாலமே இல்லை என நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய பாஜக அரசு அறிவித்தது. இதையடுத்தே நேற்று தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். இந்த தீர்மானத்தை தமிழ்நாடு பாஜக ஆதரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications