"பிரிச்சி பாருங்க".. முதல் விதையை "அங்கிட்டு" தூவிய எடப்பாடி பழனிசாமி.. பாஜகவை விட, குஷியில் திமுக
சென்னை: சிறுபான்மை வாக்குகளுக்கு குறி வைத்திருக்கும், அதேசமயம், தென்மண்டலங்களிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனம் திரும்பியிருக்கிறது.
பாஜக கூட்டணியிலிருந்து இப்போது விலகியிருப்பது, அதிமுகவுக்கு கூடுதல் பலத்தை பெற்று தந்துகொண்டிருக்கிறது.. அதாவது, திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள், திமுக கூட்டணியில் இடம்பெற முடியாத நிலைமை கொண்ட கட்சிகள், எல்லாமே அதிமுகவுக்கு ஆதரவாக மாறி உள்ளதாக சொல்கிறார்கள்.

இஸ்லாமிய ஆதரவு: சில நாட்களுக்கு முன்பு, அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எப்படியும் இவர்கள் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. பிறகு, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
பிறகு, எஸ்டிபிஐ கட்சியும் சந்தித்து ஆதரவு தெரிவித்தது.. பிறகு, ஹஜ் லைபர் சொசைட்டி, ஜனநாயக முஸ்லிம் மறு மலர்ச்சி கழகம் உள்ளிட்ட 6 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் எடப்பாடியை சந்தித்தார்கள்.
அப்பாயிண்மென்ட்: இதுபோக, மேலும் சிறுசிறு அமைப்புகளும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.. சில அமைப்புகள் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கு, அப்பாயிண்மென்ட் கேட்டுள்ளன. அதனால், கூட்டணி முறிவை, அறிவித்த இந்த குறுகிய நாட்களிலேயே சிறுபான்மையினரின் கவனம் அதிமுக பக்கம் திரும்பி இருப்பது கவனத்தை பெற்று வருகிறது. இந்த சிறுபான்மை அமைப்புகளை எல்லாம் ஒன்றிணைத்து, ஒரு சீட் ஒதுக்கவும் எடப்பாடி முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள்.
அதேபோல, தென்மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியின் கவனம் திரும்பியிருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை, டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோரை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி நன்றாகவே உணர்ந்துள்ளாராம். அதனால், பாஜகவின் இந்த வியூகத்தையும் உடைக்கவும், தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள பிற சமூகத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
நாடார் வாக்குகள்: குறிப்பாக, தேவேந்திர குல வேளாளர், நாடார் சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, இந்த 2 சமூகத்தை சேர்ந்தோருக்கு, கட்சிக்குள் முக்கிய பதவிகளை ஒதுக்க போவதாக சொன்னார்கள்.
அதாவது, நாடார், தேவேந்திர குல வேளாளர் சமூத்தை சேர்ந்தவர்களை மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கும் வாய்ப்பும் உள்ளதாக, சில நாட்களுக்கு முன்பு நாம் பிரத்யேக செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அதற்கான முதல் விதையை தேனியில் தூவியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தேனி மேற்கு மாவட்டத்துக்கு புதிதாக அதிமுக நிர்வாகிகளை இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்... மாவட்ட அவை தலைவராக கணேசன், இணை செயலாளராக முத்துரத்தினம், துணை செயலாளர்களாக வீரமணி கர்ணன், சற்குணம், மாவட்ட பொருளாளராக, இளையநம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி: இதேபோல, எம்ஜிஆர் இளைஞர் அணி, வக்கீல் பிரிவு, சிறுபான்மை பிரிவு என பல்வேறு பிரிவுகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இதற்கான அறிவிப்பை, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார்.. தென்மண்டலங்களில் எடப்பாடியின் குறி விழுந்துள்ளதை, ஓபிஎஸ், தினகரன் மட்டுமல்லாமல், பாஜகவும் சேர்ந்தே கவனித்து வருகிறது.
ஆனால், இந்த தென்மண்டலங்களில் வாக்கு சதவீதத்தை பெறுவதற்காகவும், தன்னுடைய செல்வாக்கை அதிகரித்து கொள்வதற்காகவும், எடப்பாடி பழனிசாமி பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்.. அதனால்தான், சட்டசபை உட்பட தனக்கு அடுத்தபடியான இடத்தை, ஆர்பி உதயகுமாருக்கு வழங்கி, நிறைய பதவிகளையும் ஒதுக்கினார்..
மாறுமா வாக்குகள்: அப்படியிருந்தும் எந்த பலனும் இந்த 2 வருட காலங்களில் கிடைக்காத காரணத்தினால்தான், மதுரை மாநாட்டையே, மதுரையில் நடத்தும் நிலைமைக்கு ஆளானார். அந்த மாநாடு ஓரளவு வெற்றியை தந்தது என்றாலும், முக்குலத்தோரின் ஆதரவு வாக்குகளாக மாறுமா என்று தெரியவில்லை. புதிய புதிய நிர்வாகிகளை நியமிக்க துவங்கி உள்ள நிலையில், அதிமுகவுக்கான பலம் தெற்கில் எப்படி இருக்க போகுதென்றும் தெரியவில்லை.
ஆனால், திமுகவோ எதற்கும் அசராமல் உள்ளது.. எக்காரணம் கொண்டும் சிறுபான்மை ஓட்டுக்களை தங்களிடமிருந்து பிரிக்கவே முடியாது என்ற பெருத்த நம்பிக்கை கொண்டுள்ளது.. அதுமட்டுமல்ல, ஒருபக்கம் எடப்பாடி, மறுபக்கம் பாஜக, ஓபிஎஸ், என இரண்டாக பிரிந்து தெற்கில் களமிறங்கினால், அது தங்களுக்குதான் பிளஸ் என்றும் திமுக கணக்கு போடுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications