தூக்கி அடிக்கப்படும் இளம் வீரர்கள்! உள்ளே வரும் 2 ஜாம்பவான்கள்! இந்திய அணியில் ரோஹித் அதிரடி மாற்றம்
அகமதாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மேட்ச் அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் இரண்டு பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 50 ஓவர் தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியிலும் , நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக நாளை மேட்ச் நடக்க உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. 11 ஆயிரம் போலீசார் இந்த போட்டிக்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர். இந்த போட்டிக்கு முன்பாக மிகப்பெரிய தொடக்க விழாவும் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் முக்கியமான சில மாற்றங்களை கேப்டன் ரோஹித் சர்மா செய்ய உள்ளதாக இந்திய அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாற்றங்கள்: இந்திய அணியில் மீண்டும் அஸ்வின் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது. ஷரத்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அஸ்வின் சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. உலகக் கோப்பையை தவிர அஸ்வினை பெரிதாக பாகிஸ்தான் எதிர்கொண்டதே இல்லை. அதனால் பாகிஸ்தானுக்கு அகமதாபாத் பிட்ச் கொஞ்ச ஆப் ஸ்பின் பவுலிங்கிற்கு உதவியாகவும் இருக்கும். இதனால் ஷரத்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
இரண்டாவதாக அணியில் ஷமி சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. நேற்று சிராஜ் 9 ஓவர் போட்டு ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. 76 ரன்கள் கொடுத்த அவர்.. 8.40 எக்கனாமியில் பவுலிங் செய்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சிலும் தொடக்கம் முதலே சரியாக பவுலிங் செய்யாத அவர் கடைசி ஓவரில் மட்டுமே ஒரே ஒரு விக்கெட் எடுத்தார். இரண்டு மேட்சிலும் லூஸ் பந்துகளை போட்டு இவர் அவுட் ஆனார்.

இரண்டு மேட்சிலும் அவரின் பவுலிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முக்கியமாக சரியான லைன் மற்றும் லென்தில் கூட அவர் பவுலிங் செய்யவில்லை. இந்த நிலையில்தான் அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் மேட்சில் அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஷமியை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஷமி அணியில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. அந்த பிட்ச் குஜராத்தில் ஷமி ஐபிஎல் ஆடுகையில் அவருக்கு பிரபலமான பிட்ச். அங்கே நன்றாக அவர் விக்கெட்டும் எடுப்பார். அந்த வகையில், ஷமியை அணியில் எடுத்துவிட்டு சிராஜை அணியில் இருந்து எடுக்க வேண்டும். அவர் தொடர்ந்து அணியில் நீடிக்க கூடாது என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். தனால் ஷமி அணியில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன
பேட்டிங் ஆர்டர் மாற்றம்: அதேபோல் அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றமும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதன்படி அணியின் மிடில் ஆர்டரில் கே எல் ராகுல் வலுவாக ஆடுவதால் அவர் 4வது இடத்தில் இறங்கும் வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு பின்பாக ஷ்ரேயாஸ் ஐயர் இறங்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications