85-90% பாதுகாப்பு.. கொரோனா பரவல், மரணங்களை கட்டுப்படுத்தும் 2 டோஸ் கோவிட்ஷீல்ட்.. புள்ளி விவரம்
சென்னை: ஆக்ஸ்போர்ட் ஆஸ்டர்செனகா வேக்சினான கோவிட்ஷீல்டின் இரண்டு டோஸ்களை எடுப்பதன் மூலம் 85-90% பேர் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்படுவதாக இங்கிலாந்து பொது சுகாதார மையம் எடுத்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. வேக்சினின் 2 டோஸ் எடுத்த 85-90% பேருக்கு கொரோனா அறிகுறிகள், தாக்கம் ஏற்படவில்லை.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா வேக்சின் பல நாடுகளில் வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் மக்களுக்கு வேகமாக 2 டோஸ் வேக்சின் அளிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு கொரோனா வேக்சின் காரணமாக உலகம் முழுக்க பல லட்சம் பேர் கொரோனா ஏற்படாமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். பெரிய அளவில் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் கொரோனா மூலம் ஏற்படும் காய்ச்சல், சுவாச பிரச்சனைகளை வேக்சின் பெரிய அளவில் தடுக்கிறது.

வேக்சின்
வேக்சின் அதிகம் செலுத்தப்பட்ட அமெரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவமனைகளில் மக்கள் சேர்வதும் குறைந்துள்ளது. பலி எண்ணிக்கையும் பெரிய அளவில் குறைந்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதோடு, அதன் ஆற்றலையும் இந்த வேக்சின்கள் மட்டுப்படுத்துகின்றன. அந்த வகையில் ஆக்ஸ்போர்ட் ஆஸ்டர்செனகா வேக்சினான கோவிட்ஷீல்ட் வேக்சினின் 2 டோஸ்களை எடுப்பதன் மூலம் 85-90% பேர் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்படுவதாக இங்கிலாந்து பொது சுகாதார மையம் எடுத்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

அறிகுறிகள்
ஆக்ஸ்போர்ட் வேக்சினின் 2 டோஸ் எடுத்த 85-90% பேருக்கு கொரோனா சார்ந்த அறிகுறிகள் ஏற்படவில்லை. அதோடு 2 டோஸ் வேக்சின் காரணமாக இங்கிலாந்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 13000 மரணங்கள் தடுக்கப்பட்டு உள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 40 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சேர்வதும் ஆக்ஸ்போர்ட் ஆஸ்டர்செனக வேக்சினான கோவிட்ஷீல்ட் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா
ஐரோப்பாவில் கடந்த வருடம் மிகப்பெரிய அளவில் கொரோனா கேஸ்களும், மரணங்களும் நிகழ்ந்து வந்த நிலையில், தற்போது வேக்சின் காரணமாக இந்த பரவல் தடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் வேக்சினின் 2 டோஸ் எடுப்பதன் காரணமாக பரவல் குறைந்துள்ளது, 85-90% பேருக்கு கொரோனா சார்ந்த அறிகுறிகள் ஏற்படவில்லை என்று இதில் கூறப்பட்டுள்ளது.

அறிகுறிகள்
யுகேவில் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு வேக்சின் போடப்பட்டுவிட்டது. அங்கு 8-12 வார இடைவெளியில் இரண்டு டோஸ் வேக்சின் போடப்படுகிறது. வேக்சின் எடுத்த சிலருக்கு கொரோனா வந்துள்ளது. ஆனால் இவர்களுக்கு பெரிய அறிகுறிகள் இல்லை.

குணமடைகிறார்கள்
புதிய வகை கொரோனா இவர்களை தாக்கினாலும் அவர்களின் உடல் ஏற்கனவே வேக்சின் எடுத்த காரணத்தால் அவர்கள் பெரிய அளவில் பாதிக்காமல் எளிமையாக குணமடைகிறார்கள். ஆனால் வேக்சினின் இரண்டு டோஸ் எடுப்பதன் மூலம் மக்கள் மருத்துவமனைகளில் சேரும் அளவிற்கு நிலைமை மோசமாகாமல் வேக்சின் தடுக்கிறது என்று இங்கிலாந்து பொது சுகாதார மையம் எடுத்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications