நண்பர்களை சந்திக்க போன 3 பெண்கள் பலாத்காரம்.. வளைத்த 11 பேர் கொண்ட கும்பல்.. குலுங்கிய சென்னை
சென்னை: சென்னையில் தனது நண்பர்களை சந்திக்க சென்ற பெண் 11 பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் பெண் ஒருவர் இருக்கிறார்.
இந்த பெண்ணுக்கு 18 வயதில் உறவுக்கார பெண் ஒருவர் உள்ளார். அவர் தாம்பரத்தை சேர்ந்தவர். அவருக்கு 17 வயதில் இன்னொரு தோழியும் இருக்கிறார். இவர்கள் மூன்று பேரும் அடிக்கடி சந்திப்பது ஒன்றாக வெளியே செல்வது வழக்கம்.

அந்த வகையில் இவர்கள் மூவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று வந்துள்ளனர். அடிக்கடி ஆண் நண்பர்களை பார்ப்பதை இவர்கள் வழக்கமாக வைத்து இருந்தனர். அதன்படியே நேற்று இவர்கள் ஒன்றாக ஆண் நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இரவு 10 மணிக்கு இரண்டு 17 வயது சிறுமிகளும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். ஆனால் 18 வயது பெண் மட்டும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து சிறுமிகளிடம் விசாரித்து உள்ளனர்.
ஆனால் சிறுமிகள் என்ன என்று சொல்லாமல் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருந்துள்ளனர். இதையடுத்து அந்த 18 வயது பெண் இரவு 2 மணிக்கு வீட்டிற்கு திரும்பி உள்ளார். அவரிடம் செய்யப்பட்ட விசாரணையில் தன்னை 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து உடனே
புளியந்தோப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் மற்ற இரண்டு சிறுமிகளும் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது . இந்த விசாரணையில் மொத்தம் 11 பேர் சேர்ந்து 3 பேரையும் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பலாத்கார சம்பவத்தில் 2 சிறுவர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இவர்களை கைது செய்தனர். இதில் இரண்டு பேர் சிறுமிகள் என்பதால் இந்த 11 பேர் மீதும் போஸ்கோ வழக்கு பதியப்பட்டது.
நண்பர்களாக இருந்து இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications