விஜய் வாக்குறுதி என்னாச்சு? திமுக எம்எல்ஏக்கள் கேள்வி கேட்க எழுந்தவுடன்.. சட்டசபை லைவ் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை நேரலை எப்போதும் தொடரும், நிறுத்தப்படாது என்று விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அறிவித்த நிலையில் அதை இரண்டாவது நாளே சட்டசபையில் தவெக அரசு மீறி உள்ளது. இதனால் விஜய் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை முதல் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரங்கேறி வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவாதங்களின் தொடர்ச்சியாக, அவையில் எதிர்பாராத ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. தேமுதிக, பாமக, திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது உரைகளை ஆற்றி முடித்த சில நிமிடங்களிலேயே, சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ நேரடி ஒளிபரப்பு (Live Telecast) திடீரென நிறுத்தப்பட்டது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொண்டு வந்த மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானத்தின் மீது மிக ஆரோக்கியமான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் 'நேரலை நிறுத்தம்' கோட்டை வளாகத்தில் பெரும் பரபரப்பையும், அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

Sudden Blackout in Assembly Why the Live Telecast Was Stopped Right After Vijay Speech

எதிர்க்கட்சிகளின் அதிரடி உரைகளுக்குப் பின் நிகழ்ந்த திருப்பம்!

இன்று காலை அவை தொடங்கியதில் இருந்தே மேகதாது விவகாரம் தான் முதன்மைப் பேசுபொருளாக இருந்தது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காகிதம் இல்லாமல் ஆற்றிய கம்பீர உரையும், பாமகவின் சௌமியா அன்புமணி புள்ளிவிவரங்களோடு கர்நாடகாவைச் சாடிய விதம், அதன்பின் திமுக சட்டமன்ற குழுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புதிய நடுவர் மன்ற திருத்தக் கோரிக்கையை முன்வைத்து ஆற்றிய உரை என அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.

தலைவர்களின் இந்த முதிர்ச்சியான வாதங்களை மக்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். ஆனால், உதயநிதி ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்து, தீர்மானத்தின் மீதான அடுத்தகட்ட விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்புக்கான சூழல் உருவான தருணத்தில், அவை எல்லாம் லைவ் செய்யப்பட்டது, அதன்பின் வாக்கெடுப்பு முடிந்தது. அதை தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது.. தொலைக்காட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நேரடி ஒளிபரப்பு சிக்னல் திடீரெனத் துண்டிக்கப்பட்டது.

நேரலை நிறுத்தப்பட்டது ஏன்? சபை வட்டாரங்கள் கூறுவது என்ன?

சட்டமன்ற நேரலை திடீரென நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் உடனடியாக வெளியாகவில்லை என்றாலும், இது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. மேகதாது தனித்தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நிறைவடைந்து, அடுத்தகட்டமாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ நேரடி ஒளிபரப்பு (Live Telecast) திடீரென நிறுத்தப்பட்டது.

ஆளுநர் உரைக்கு நன்றி

இதனால் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடங்கிய உடனே, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசாரமான வார்த்தைப் பரிமாற்றங்கள் அல்லது கூச்சல்-குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக, பாமக, திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது காரசாரமான வாதங்களை முன்வைக்கும் நேரத்தில் உடனே இந்த நேரலை நிறுத்தம் நிகழ்ந்தது, கோட்டை வட்டாரத்திலும் செய்தி ஊடகங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டசபை நேரலை எப்போதும் தொடரும், நிறுத்தப்படாது என்று விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அறிவித்த நிலையில் அதை இரண்டாவது நாளே சட்டசபையில் தவெக அரசு மீறி உள்ளது. இதனால் விஜய் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+