சென்னைக்கு மீண்டும் வந்த 2 மணி நேர மின்வெட்டு.... துண்டு துண்டாக வெட்டி அமல்!
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறைக் காரணாக சென்னையில் இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது..
நிலக்கரி பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. வடகிழக்குப் பருவ மழையும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் மின் பயன்பாடும் குறையவில்லை.

இதனால் தமிழகத்தில் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் மின்வெட்டை எதிர்கொண்டாலும் சென்னை தப்பித்துக் கொண்டிருந்தது.
இன்று முதல் சென்னைக்கும் 2 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுழற்சி முறையில் இந்த மின்வெட்டு நடைமுறைக்கு வந்தது.
சென்னையில் பல இடங்களில் தொடர்ச்சியாக 2 மணி நேரமும் சில இடங்களில் காலையில் 1 மணி நேரம் மாலையில் 1 மணிநேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலோ விசித்திரமாக மின்வெட்டு அமலாக்கப்பட்டது. அதாவது காலையில் 8 மணி முதல் 9 மணி வரை சீராக 1 மணி நேரம் மின்வெட்டு அமலானது.
பின்னர் மாலை 3 மணிக்கு மிகச் சரியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சரி 3 மணி முதல் 4 மணி வரை மின்வெட்டு போல என நினைத்தவர்களுக்கு இன்ப ஷாக்காக 3.30க்கே மின்சாரம் கொடுக்கப்பட்டது.
இந்த இன்ப ஷாக் நீண்டநேரம் நீடிக்காமல் மீண்டும் சிறிது நேரம் மின்வெட்டு துண்டிக்கப்பட்டது. இப்படியே சிறிது சிறிது நேரமாக என ஒரு மணி நேர கணக்குக்கு மின்வெட்டும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது.
நாளைக்கு என்ன விசித்திரமான முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்படுமோ என்ற டென்ஷனில் இப்போது சென்னை வாசிகள்...
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications