ரேசன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு..மாணவர்களுக்கு சிறுதானியங்கள்..வேளாண் பட்ஜெட்டில் சூப்பர்
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என விவசாயிகள் கூறியுள்ளார்.
சென்னை: கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிக அளவில் விளைவிக்கும் விவசாயிகளுக்கு 5 லட்சம் பரிசளிக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ரேசன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் சங்க இலக்கியங்களில் வேளாண் பற்றி கூறியுள்ளதை குறிப்பிட்டு பேசினார்.
கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்று, விவசாயிகளிடம் பல மாவட்டங்களில் ஆலோசனை கேட்கப்பட்டது. துறைசார்ந்த அலுவலகர்கள் சென்று விவசாயிகள், வேளாண் பொருள் உற்பத்தியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் 25 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயிர் சாகுபடி பரப்பு
நடப்பாண்டு 5 லட்சத்து 36000 ஏக்கர் பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 1.82 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கிராமங்களில் உலர் களங்கள்
விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறியதால் விவசாய சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் கிராமங்களில் 250 உலர்களங்கள் கட்டப்படும். சாகுபடி நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும்.

சிறுதானியங்கள்
கம்பு, கேழ்வரகு, பனிவரகு, சாமை,குதிரைவாலி போன்ற ஆகியவை சிறுகு தானியங்கள். சிறு தானியங்கள் வறட்சியிலும் வளர்பவை. ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேசன்கடைகளில் கேழ்வரகு
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாட்டில் நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும். சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ரேசன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு விற்பனை செய்யப்படும்.

சிறுதானிய ஆண்டு
2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ஏக்கரில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படும். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்பவர்களுக்கு ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்களுக்கும் விவசாயிகளுக்கும் மானியங்கள் அளிக்கப்படும். மத்திய மாநில அரசு உதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

கல்வி நிறுவனங்களில் சிறுதானியங்கள்
சிறுதானியங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க, கேழ்வரகு, கம்பு போன்றவை நேரடியாக கொள்முதல் செய்யப்படும். கம்பு, கேழ்வரகு கொள்முதல் செய்து கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications