4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்
ஆவடியில் நரிக்குறவ பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: நரிக்குறவர் பெண் ரோஜாவை கற்பழித்து கொன்றதுடன், அதற்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையையும் தலையில் கல்லை போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆவடி உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்பு அருகே நரிகுறவர் காலனி ஒன்று உள்ளது. இங்கு நரிகுறவர் இனத்தை சேர்ந்த தம்பதிதான் அருள் பாண்டியன்-ரோஜா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். ரோஜாவுக்கு 22 வயதாகிறது.
இவர்களின் வேலையே ரோட்டோரம் ஊசி மணி விற்பதுதான். இப்போது பொங்கல் பண்டிகை என்பதால், ஊசிமணிகளை விற்க அருள் பாண்டி மகனை அழைத்து கொண்டு திருத்தணி சென்றுவிட்டார்.

கல்லை போட்டு கொலை
இந்நிலையில் நேற்றிரவு பெண் குழந்தையுடன் ரோஜா தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ரோஜாவை கற்பழித்தனர். பிறகு அவரது தலையில் கல்லை போட்டு கொலையும் செய்தனர்.

அலங்கோலம்
இதற்கு இடையூறாக இருந்த பெண் குழந்தையின் தலையிலும் கல்லை போட்டு கொன்று அவர்கள் தப்பி சென்றுவிட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர் ரோஜா வீட்டிற்கு இன்று காலை சென்றபோதுதான், அவரது உடை அலங்கோலமாக இருப்பதும், தாயும்-மகளும் கொலை செய்யப்பட்டு கிடப்பதும் கண்டு அதிர்ச்சி ஆனார்கள்.

4 பேரிடம் விசாரணை
உடனடியாக இது சம்பந்தமாக போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார் உடல்களை கைப்பற்றினர். இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியில் வசித்து வந்த விஜய், ராஜ்கமல், வீரகுமார், தீபன், ஆகிய நான்கு பேரை பிடித்து அவர்களிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.

சிறையில் அடைப்பு
இவர்கள் 4 பேருக்குமே வயது 22-க்குள் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில் ரோஜாவை கற்பழித்து, மகளுடன் சேர்த்து கொன்றதை வீரகுமார் என்பவர் ஒப்பு கொண்டார். இதையடுத்து, வீரகுமார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications