Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக வடை சுடுவதாக திமுக நினைத்துக் கொள்ளட்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழிசை எழுப்பிய 2 கேள்விகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக வடை சுடுவதாக திமுக நினைத்துக் கொள்ளட்டும். ஆனால், நாங்கள் வடை சுடவில்லை. மக்களின் வாக்குகளை தான் நாங்கள் சுட்டுக்கொண்டிருக்கிறோம் என்று தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.

தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில், 'பிரதமர் நரேந்திர மோடியை பார்த்ததும், பாஜகவின் வாகனப் பேரணியை பார்த்தும் திராவிட முன்னேற்ற கழகத்தினர் பயப்படுகிறார்கள். இத்தனை நாள் திமுகவினருக்கு மக்கள் வாக்களித்து பார்த்தார்கள். ஆனால், அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

2 questions posed by South Chennai BJP candidate Tamilisai Soundrarajan to Chief Minister MK Stalin

சென்னை திமுகவின் கோட்டை என்ற கனவும் நிச்சயம் தகர்க்கப்படும். திமுகவினர் அவர்கள் செய்த சாதனையை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பாஜக வடை சுடுகிறது என்று கூறி பிரசாரம் செய்யக்கூடாது. பாஜக வடை சுடுவதாக தி.மு.க. நினைத்துக்கொள்ளட்டும். ஆனால், நாங்கள் வடை சுடவில்லை. மக்களின் வாக்குகளைதான் நாங்கள் சுட்டுக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

முன்னதாக சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் தென் சென்னை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போதும் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "தமிழ்நாடு கல்வியில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து இருக்கிறது என்றால் அதற்குப் பெருந்தலைவர் காமராஜர் தான் முக்கிய காரணம்.

மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கியவர் பெருந்தலைவர் காமராஜர். கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடம் கட்டும்பொழுது நான் பள்ளி மாணவியாக இருந்தேன். கோட்டூர்புரம் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று சென்ற போது பார்த்தேன். மண்டபத்தின் வெளியில் கரும்புச் சாறுகளும் குப்பைகளும் கொட்டப்பட்டு இருந்தன. இப்பொழுதும் அப்படியே காட்சியளிக்கிறது. இங்கிருந்து புல் செடிகள் அனைத்தும் காய்ந்து கிடக்கிறது.

கருணாநிதிக்குச் சமீபத்தில் கட்டப்பட்ட அவரின் நினைவிடத்தை எவ்வாறு பராமரிக்கிறார்கள். இதனை எவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். நினைவிடத்தை பராமரிப்பதிலேயே பாரபட்சம் காட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன்னாள் பெருந்தலைவர்களுக்கு மதிப்பே கிடையாது. நான் வெற்றி பெற்றால் இந்த நினைவிடத்தைச் சிறப்பாகப் பராமரிப்பேன். பெருந்தலைவர் காமராஜரின் சரித்திரத்தை யாராலும் நிச்சயம் மறைக்க முடியாது.

காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்காக மட்டுமே கூட்டணி வைக்கிறாரகள். ஸ்டாலின் கூறுகிறார் ஜனநாயக முறைப்படி அவர்கள் இருப்பதாகவும், சர்வாதிகாரமாக பாஜக இருப்பதாகவும் தெரிவித்தார். சர்வாதிகார நிலையுடன் அவசர நிலையை பிரகடனப்படுத்தி இவர்களைச் சிறைக்கு அனுப்பியது காங்கிரஸ் தான். இந்திரா காந்திக்குப் பயந்து தான் திமுகவினர் கச்சத்தீவைத் தாரைவார்த்துக் கொடுத்தார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணியில் இருந்த பொழுது கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் திமுக மேற்கொள்ளவில்லை. அன்று உச்சநீதிமன்றம் இல்லையா ஏன் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் 23 கேள்விகள் கேட்கிறார். நான் கேட்கிறேன், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தது யார். ஜல்லிக்கட்டுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர் யார். மழைக்கு வராத தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி எம்பி பிரச்சாரத்திற்கு வருகிறார்.. மழையின் போது மத்திய அமைச்சர்கள் வந்து பார்வையிட்டுச் சென்றார்கள்" என தமிழிசை சௌந்தராஜன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+