2 காரணங்கள்.. 3 பிளான்கள்.. ஆட்டிப்படைக்க போகும் பூதம்.. ஆளுநர் ரவி திடீரென டெல்லி செல்வது ஏன்?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று டெல்லி செல்ல உள்ள நிலையில், அவரின் பயணத்திற்கான காரணம் என்ன என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார். டெல்லிக்கு இவர் மத்திய அரசு சார்பாக அழைக்கப்பட்டிருக்கிறார். 2 நாள் பயணமாக அவரது டெல்லி ப்ரோக்கிராம் அமைய உள்ளது. அவர் முதலில் 5 நாள் பயணமாக செல்வதாக இருந்தது.
ஆனால் தற்போது இது 2 நாள் பயணமாக சுருக்கப்பட்டு உள்ளது.

சந்திப்பு
இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட, சில முக்கிய அமைச்சர்களை சந்திக்கிறார். பிரதமர் மோடியை ரவி சந்திப்பது இன்னும் உறுதியாகவில்லை. அமித் ஷாவை நாளை காலை ஆளுநர் ரவி சந்திக்க உள்ளார். அரசியல் பயணமாக மட்டுமில்லாமல் இது பர்சனல் பயணமாகவும் இருக்க போகிறது. இந்த பயணத்தோடு தனிப்பட்ட நிகழ்வுகளையும் முடித்து விட்டு மாதத்தின் இறுதியில் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார் கவர்னர்.

எடப்பாடி
ஆளுநர் ரவியின் இந்த பயணத்திற்கு பின் 2 காரணங்கள் உள்ளன. காரணம் 1 - அதிமுக உட்கட்சி மோதலுக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்றார். டெல்லி சென்ற எடப்பாடி அமித் ஷாவுடன் 20 நிமிடம் சந்திப்பு நடத்தினார். டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி கையில் பெரிய "ரெட்" லிஸ்ட் ஒன்றுடன் சென்றுள்ளதாக கூறப்பட்டது. அதாவது ஆக்சன் எடுக்கப்பட வேண்டியவர்களுக்கான லிஸ்ட் என்கிறார்கள். இது தொடர்பாக பேச தற்போது ரவி டெல்லி செல்கிறார். இதில் பல பூதங்கள் வெளியே வரலாம் என்கிறார்கள்.

டெல்லி பயணம்
அதாவது இந்த கோப்புகளில் இருக்கும் விஷயங்கள் பற்றி ரவியிடம் விசாரிக்க டெல்லி முடிவு செய்து உள்ளதாம். கோப்புகளில் இருப்பது எல்லாம் சரியா என்று கேட்க இருக்கிறார்களாம். காரணம் 2 - தமிழ்நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்தும் பேச உள்ளனர். பாஜக அலுவலகங்கள், பாஜக நிர்வாகிகள் வீடுகள் மீது வீசப்படும் பெட்ரோல் குண்டுகள் குறித்து பேச முடிவு செய்துள்ளார். ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்; அரசியல் லாபங்களுக்காக வன்முறையை தூண்டுபவர்கள் பயங்கரவாதிகள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படையாக சாடியுள்ளார்.

வெளிப்படையாக பேசினார்
மனித உரிமை, அரசியல், மாணவர் இயக்கங்கள் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகவும் செயல்படுகிறது. நாட்டை சீர்குலைப்பதுதான் ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நோக்கம் என்று ஆளுநர் ரவி வெளிப்படையாக பேசி இருந்தார். அந்த இயக்கத்தை தடை செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அது தொடர்பான உளவு தகவல்களை அளிக்க ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

3 பிளான்கள்
இந்த பயணத்திற்கு பின் வேறு 3 விதமான பிளான்கள் இருக்கின்றன என்று தகவல்கள் வருகின்றன.
1 - தமிழ்நாடு அரசு சார்பாக இயற்றப்பட்ட சில மசோதாக்கள் பற்றி ஆய்வு செய்வது.
2- பர்சனலாக சில தலைவர்களை அரசியல் கடந்து சந்திப்பு
3 - தென் மாநில பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேசுவது ஆகியவை ஆளுநர் ரவியின் பிளான்கள் என்று கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications