'திராணி இருக்கா'? அண்ணாமலைக்கு எதிராக வெடிக்க காத்திருக்கும் 2 மேட்டர்.. கடும் கோபத்தில் எடப்பாடி!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யாமல், கூட்டணி கட்சி என்பதால் பொறுமையாக இருந்த அதிமுக, இனி பொறுமையாக இருக்கக்கூடாது என்று முடிவுக்கு வந்துவிட்டது. அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி அரசியலை கொண்டு போக நினைப்பதை பார்த்த எடப்பாடி பழனிசாமி, அவருக்கு உரிய பதிலடி கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் DMK Files என்ற பெயரில் வெளியிட்ட சொத்துப் பட்டியல் திமுகவை எந்த அளவிற்கு கோபப்படுத்தியதோ, அதே அளவு அதிமுகவை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. காரணம், அதிமுக உள்ளிட்ட ஆட்சியில் இருந்த கட்சிகளின் சொத்துக்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று சொன்னதுதான்.

கூட்டணி கட்சியான அதிமுகவையும் சேர்த்து அன்று செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசிய விதத்தை அதிமுக தலைமையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். இதனால் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் இனி தீவிர தாக்குதல்களை அதிமுகவினர் இனி அதிக அளவு முன்னெடுப்பார்கள் என்றே கூறப்படுகிறது.
இதுரை அதிமுகவும் திமுகவும் செய்து வந்த அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று விரும்பும் அண்ணாமலை, திமுகவை மட்டும் எதிர்க்காமல் கூட்டணி கட்சியான அதிமுகவையும் அவ்வப்போது விமர்சித்து வந்தார். முதலில் அமைதியாக இருந்த அதிமுக இப்போது பதிலடி கொடுக்க தொடங்கிவிட்டது.
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை தான் விரும்பவில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதை சாதாரணமாக அதிமுக கடந்துவிடவில்லை. கடுமையான எதிர்வினை ஆற்றியது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், டிஎம்கே பைல்ஸ் என்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவோம் என்று மறைமுகமாக கூறினார்.
இதை கேட்டு கடும் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி,செய்தியாளர் சந்திப்பிலேயே அண்ணாமலையின் திட்டத்தை போட்டுடைத்தார். அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தும் அரசியலை செய்து வருகிறார் என்றும், அவர் எதையாவது சொல்லிவிடுகிறார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு நாங்கள் ஆளாகிறோம். இப்படி பேசி பேசியே பெரிய ஆளாகி வருகிறார். அவரை பற்றி இனி தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும், முதிர்ந்த அரசியல்வாதியின் பேச்சுக்குதான் இனி பதில் சொல்வேன் என்று தடலாடியாக தெரிவித்தார்.

அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தியே தமிழக அரசியல் இயங்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று அழுத்தமாக கூறிய எடப்பாடி, இனி அவரை அவரை வளரவிட்டால் ஆபத்து என்பதை உணந்தததுடன், கடுமையாக எதிர்ப்புகளை வெளியிட முடிவு செய்துவிட்டார். எனவே இனி அதிமுகவும் அண்ணாமலையை எதிர்த்து கடுமையாக பதிலடி கொடுக்கும் என்றே தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமியின் கோபத்திற்கு அண்ணாமலை அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியதும் தான் காரணமாம். அண்ணாமலை அப்போது பேசும் போது, ஆட்சியில் இருந்து அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024ல் வெளியிடப்படும் என்றும், எதிர்க்கக்கூடாதுன்னா.. டெல்லி போய் அண்ணாமலையை மாத்திட்டுவாங்க, சக்தி இருக்கு , திராணி இருக்கு, தெம்பு இருக்கன்னா மாத்திட்டுவாங்க பிரஸ்மீட்டில் சவால் விட்டிருந்தார். இதுவும் எடப்பாடி பழனிசாமியை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு எதிராக இனி திமுக மட்டுமின்றி அதிமுகவும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்யவாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இது ஒருபுறம் எனில் அண்ணாமலை வெளியிட்ட டிஎம்கே பைல்ஸ்க்கு பின் இரண்டு விஷயங்கள் நடந்திருக்கிறது. பாஜகவிலேயே அண்ணாமலை ஆதரவு VS அண்ணாமலை எதிர்ப்பு அணி நேரடியாக களம் கண்டிருக்கின்றன.இப்போதைக்கு வெளியில் வரவில்லை என்றாலும், விரைவில் இது வெடிக்க வாய்ப்பு உள்ளதாம். அண்ணாமலையின் அரசியலை விரும்பாதவர்களும் பாஜகவில் இருக்கிறார்களாம். பலர் மறைமுகமாக அண்ணாமலைக்கு எதிராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மறு பக்கம், பல வருடங்களுக்கு பிறகு தீவிரமாக எதிர்ப்பு கருத்துக்களை அதிமுகவே பாஜகவிற்கு எதிராக முன்னெடுக்க தொடங்கி உள்ளது. அதேநேரம் அதிமுகவிற்கு அண்ணாமலை தான் பிரச்சனையாக இருக்கிறார். மற்றபடி பாஜகவுடன் நட்பாக இருக்வே விரும்புகிறது.












Click it and Unblock the Notifications