நேராக வந்து இறங்கிய 2 டெல்லி ‘தலைகள்’.. ஓபிஎஸ் உடன் மீட்டிங்.. அப்படியே பாஜக மேலிடத்துக்கு சிக்னல்!?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பாஜக கூட்டணியை இறுதி செய்வதற்காக டெல்லி தலைகள் 2 பேர் சென்னைக்கு வந்துள்ளனர். ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக தலைகள், இன்று டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், வரும் மார்ச் 22 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாகவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தாமரைக்கு வாக்கு சேகரிப்பார் என்றும் பாஜக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் 4 முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்துவிட்டார் பிரதமர் மோடி. அடுத்தடுத்து பிரதமர் மோடி, தமிழ்நாட்டு வருகை தந்து கொண்டிருப்பதால் தமிழக பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். அடுத்தகட்டமாக பிரதமர் மோடி இங்கு வருவதற்குள் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி இறுதியாகும் எனவும் கூறப்படுகிறது.
தமிழகம் வந்துள்ள தலைகள்: இந்நிலையில் பாஜக மேலிட தலைவர்கள் விகே சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள், சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனையும் அவர்கள் இன்று சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. அதேபோல, ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பையும் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க முயல்கிறது பாஜக.
ஓபிஎஸ், தினகரன் உடன்: ஓபிஎஸ் மற்றும் தினகரன் உடன் இதுதொடர்பாக மேலிட தலைவர்கள் பேச உள்ளனர். சீட்கள் தொடர்பாக அவர்களுடைய கருத்துகளைக் கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், பாஜக கூட்டணி பேச்சுகள் முன்னோக்கி நகர்கின்றன.
தொடர்ந்து, பாஜகவின் தேர்தல் குழுவினரோடு பாஜக மேலிட தலைவர்கள் விகே சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். விரைவாக, பாஜக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் கலந்து பேசி, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வார்கள் என்றும் தெரிகிறது.
பாமக எந்தப் பக்கம்?: பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை பாஜக தங்கள் கூட்டணியில் சேர்க்க முயன்ற நிலையில், அதிமுக இதில் முன்னேறியது. தேமுதிகவுடன் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது அதிமுக. விரைவில், தேமுதிகவுக்கு சீட்களை அதிமுக உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாமகவுடன் அதிமுக கூட்டணியில் முன்னேற்றம் இல்லை.
அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நேரடியாக பாஜகவின் மேலிட தலைகளுடன் பேசுவதற்காக டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் கூடுதல் இடங்களை ஒதுக்க இருப்பதால் பாமக, பாஜகவுடன் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் கேட்கும் பாமகவிற்கு வடமாவட்டங்களில் கேட்கும் இடம் ஒதுக்க முன்வராததால் பாமக நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி பங்கீடு இறுதி?: இந்நிலையில் தான் பாஜகவின் மேலிட தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு விசிட் அடித்து, கூட்டணியை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்ட நிலையில், பாஜக கூட்டணியில் இணையும் கட்சிகளுடன் விரைந்து பேசி தொகுதிப் பங்கீட்டை முடிவுக்கு கொண்டு வர பாஜக களமிறங்கியுள்ளது.
பாஜக கூட்டணியில் இருப்பதாக உறுதியாக அறிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கும் எந்தெந்த சீட் என்பது விரைவில் உறுதி செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
-
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications