சென்னை பயணிகள் கவனத்திற்கு.. தாம்பரம் - கடற்கரை இடையே இன்று முதல் 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னை: தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று (பிப்ரவரி 27) முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. எழும்பூர், கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் விரைவு மின்சார ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் கடந்த 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தாம்பரத்திலிருந்து, சென்னை கடற்கரைக்கு செல்லும் வழித்தடங்கள் மற்றும் செங்கல்பட்டு நோக்கி செல்லும் வழித்தடங்களில் 208 மின்சார ரயில்கள் இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்ட நிலையில், 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இரு மார்க்கத்திலும் 164 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
இதனால் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவசர தேவைக்காக செல்பவர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு இடையே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அலுவலக நாட்கள் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது. ரயில்கள் ரத்தால் பல்வேறு ரயில் நிலையங்களிலும், ரயில்கள் காலதாமதமாக வந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று (பிப்ரவரி 27) முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே ஒரு மணி நேரத்தில் 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. எழும்பூர், கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் விரைவு மின்சார ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications