20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. மதுரை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்.. தமிழ்நாடு அரசு அதிரடி

20 ஐபிஎஸ் அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.. அதன்படி, மதுரை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் கமிஷ்னர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக, நாடு முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கான உத்தரவு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1ம் தேதி அன்று வெளியாவது வழக்கம்.

ஆனால் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கான உத்தரவு மட்டுமே ஜனவரி 1ம் தேதி வெளியாகி வருகிறது. ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கான பேனல் கமிட்டி ஆலோசனை கூட்டமானது, ஜனவரிக்கு பிறகே நடத்தப்பட்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்பட்டு வருகிறது.

 சிவில் சப்ளை

சிவில் சப்ளை

ஏற்கனவே இந்த பதவி உயர்வுக்கான பேனல் கமிட்டி ஆலோசனை கூட்டம் காலதாமாக நடத்தப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன் விவரம் இதுதான்: சென்னை சிவில் சப்ளை காவல்துறை இயக்குனர் ஜெனராலாக இருந்த ஆபாஷ்குமார் ஐ.பி.எஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை

சென்னை

டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி சென்னை சிவில் பாதுகாப்பு மற்றும் ஹோம்கார்டு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கூடுதல் டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன்சென்னை ஏடிஜிபி நிர்வாக பிரிவில் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.. ஆசியம்மாள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், செந்தில்குமார் சென்னை டிஜிபி அலுவலக டிஜிபியாகவும், பிரபாகரன் சென்னை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐஜியாகவும், முத்துச்சாமி வேலூர் மாவட்ட டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலட்சுமி

ஜெயலட்சுமி

மேலும் கடலோர பாதுகாப்பு டிஐஜியாக கயல்விழி, சென்னை தொழில்நுட்ப சேவைத்துறை டிஐஜியாக சின்னச்சாமி, சென்னை நீதிமன்ற பாதுகாப்பு துணை கமிஷனராக ராஜராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்ட எஸ்பியாக பிரபாகரன், தர்மபுரி மாவட்ட எஸ்பியாக ஸ்டீபன் ஜேசுபாதம், சேலம் எஸ்பியாக சிவக்குமார், தஞ்சாவூர் எஸ்பியாக முத்தரசி, சென்னை சிஐடி குற்றப்பிரிவு எஸ்பியாக ரவளிபிரியா, போக்குவரத்து துணை கமிஷனராக ஜெயலட்சுமி,

 ஆபாஷ் குமார்

ஆபாஷ் குமார்

சென்னை சட்டம் ஒழுங்கு டிஐஜியாக உமா, நாமக்கல் எஸ்பியாக கலைச்செல்வன், சென்னை சிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாக அருள் அரசு, தென்காசி எஸ்பியாக செந்தில் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி துறையின் டிஜிபியாக இருந்த, ஐபிஎஸ் அதிகாரி ஆபாஷ் குமார், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக, ஐபிஎஸ் அதிகாரி ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 ரவளி பிரியா

ரவளி பிரியா

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி செந்தில்குமாரும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி கலைசெல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்டீபனும், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சிவக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ரவளி பிரியா சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+