"பூனைக்குட்டி" வெளியே வருதே.. தூண்டிலில் திமிங்கிலமே "மாட்டிக்கிச்சே".. இறங்கியடிக்க போகும் எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி தரப்பின் 20 புள்ளிகள் ஓபிஎஸ் டீம் பக்கம் தாவ போகிறார்களாம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியிட உள்ள ஆதரவாளர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் டீம் இறங்கி வரும் நிலையில், அதற்கான சாதகமான ரிப்போர்ட்களும் அவருக்கு கிடைத்து கொண்டிருக்கிறதாம்..!
அதிமுக விவகாரம், இன்னமும் அதே பரபரப்பு அடங்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட சிக்கல்கள் கூடிவிட்ட நிலையிலும்கூட, ஒற்றை தலைமை விவகாரத்தை விட்டுத்தராமல் உள்ளார்.
நேற்றுகூட, அதிமுகவில் ஒற்றை தலைமை வழக்கு விசாரணைக்கு வந்தது.. இரு தரப்பிலுமே காட்டமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
முக்கியமாக, "ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரும்பியதால் தான், ஜூலை 11- ல் பொதுக்குழு கூட்டப்பட்டது என்றும், இதில் கட்சி விதிகள் ஏதும் மீறப்படவில்லை. இனிமேலும், ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

வைத்திலிங்கம்
நேற்றைய தினம் வாதாடியதை பார்த்தால், இவர்கள் 2 பேரும் இப்போதைக்கு ஒன்று சேர மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பானது, இழுத்துக் கொண்ட போகும் என்றும் சொல்லப்படுகிறது.. அப்படி இழுபறியாகும் பட்சத்தில், எடப்பாடி தரப்பில் இருந்து, ஆதரவாளர்களை தன் பக்கம் இழுப்பதற்கான போதுமான அவகாசம் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.. கடந்த ஒரு மாத காலமாகவே, இந்த துரிதமாக நடந்து வரும் நிலையில், அதற்கான அசைமென்ட்டும் வைத்திலிங்கத்திடம் ஓபிஎஸ் தந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மா.செ.க்கள்
சேலத்தில் ஒரு மாஜி பெண் அமைச்சர், 4 சென்னை மாவட்ட செயலாளர்கள், இதைதவிர, 15 மா.செ.க்கள் என பலரும் ஓபிஎஸ்ஸுக்கு மறைமுக ஆதரவை தந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. இதைதவிர, தென்மண்டலத்தில் இருக்கும் ஒரு மாஜி அமைச்சரும் ஓபிஎஸ் பக்கம் வர தயாராகிவிட்டாராம்.. ஆனால், அவர் யார் என்று உறுதியாக தெரியவில்லை.. இந்த நேரத்தில், செல்லூர் ராஜு பெயர் பலமாக அடிபட்டு வருகிறது.. செல்லூர் ராஜை பொறுத்தவரை, கட்சியில் சீனியர்.. எடப்பாடி பக்கம்தான் தற்போதுவரை இருக்கிறார்.

சின்னம்மா
ஆனால், சசிகலாவின் விசுவாசி என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.. சசிகலா ஜெயிலில் இருக்கும்போதே, "சின்னம்மா ஜெயிலில் இருந்து சீக்கிரமா வெளியே வரணும், அது ஒன்னுதான் என்னுடைய பிரார்த்தனையே" என்று எடப்பாடி ஆட்சியின்போது, தான் அமைச்சராக இருக்கும்போதே, ஓபனாக செய்தியாளர்களிடம் சொன்னவர்.. பிறகு, சிறையில் இருந்து வெளியாகி, ஆடியோக்கள் சசிகலா ரிலீஸ் செய்து கொண்டிருந்த நேரத்தில், அதை பற்றி செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.. வழக்கமாக, ஸ்மைலிங்குடன் கூலாக பேட்டி தரும் செல்லூர் ராஜு, அன்று மட்டும் பதில் சொல்ல முடியாமல், செய்தியாளர்களிடம் கடுப்பை காட்டிவிட்டு, தெறித்து ஓடியதையும் பார்க்க முடிந்தது.

அண்ணன் ஓபிஎஸ்
காரணம், அவரால் ஜெயக்குமார் அளவுக்கு சசிகலாவை எதிர்த்து பேசவே முடியவில்லை என்பதுதான்.. இப்படிப்பட்ட ஒருவர், எடப்பாடிக்கு ஆதரவாக இருப்பதும் வியப்பை தந்து கொண்டே இருக்கிறது.. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி அங்கீகரிக்கப்பட்ட சமயத்தில், "அண்ணன் ஓபிஎஸ் அவர்களும் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம்... ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரிவு என்பது அண்ணனுக்கும் தம்பிக்கும் வரும் பிரிவைப் போன்றது தான்" என்றெல்லாம் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு பேசியிருந்தார்.

மதில் மேல் பூனை
பொதுக்குழு தினத்தன்று, ஏகப்பட்ட ரகளைகள் நடந்து முடிந்த நிலையில், செல்லூர் ராஜுவின் இந்த "வழவழா, கொழகொழா" பேச்சு, பலருக்கும் குழப்பத்தை தந்தது.. ஏற்கனவே சசிகலா, இப்போ ஓபிஎஸ்? பக்கமா என்ற சந்தேகத்தையும் இது கிளப்பியது.. இப்போது விஷயம் என்னவென்றால், ஹைகோர்ட்டில் தனிநீதிபதி ஜெயச்சந்திரன் எடப்பாடி தரப்பை கேள்வி கேட்டு, நெருக்கடி உத்தரவை பிறப்பித்ததில் இருந்தே, செல்லூர் ராஜு
"லைட்டாக" ஓபிஎஸ் பக்கம் சாய தொடங்கிவிட்டாராம்.. இணக்கமாக பேசி வருவதாகவும் சொல்கிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது..

கடுப்பு அதிருப்தி
அதாவது, மதுரை அதிமுகவில், உதயகுமாருடன் "அதிகார அதிருப்தி"யும் ரொம்ப வருடமாகவே இருந்து வருகிறது.. எடப்பாடியும், அதற்கேற்றார்போல், உதயகுமாரையே பல விஷயத்திலும் முன்னிறுத்தி பதவிகளை தந்து வருவதால், செல்லூர் ராஜுவுக்கு இது கடுப்பை தந்துவிட்டதாகவும் தெரிகிறது.. இப்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருப்பது உதயகுமார் தான் என்பதால், கூடுதல் கடுப்பில் செல்லூர் உள்ளார் போலும்.. தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கும் சூழலில், செல்லூரின் மனம் மாறி கொண்டே வருவதாகவும் கூறப்படுகிறது..

டவுட்
நாளுக்கு நாள் முக்கியத்துவங்கள் கட்சியில் குறைந்து வரும் நிலையில், ஓபிஎஸ் பக்கம் அடுத்தடுத்த நீதிமன்ற சுருக்கமாக சொன்னால், கடுப்பு + அதிருப்தி + சின்னம்மா பாசம் = இதெல்லாம் சேர்ந்து, ஒருவேளை இவர் ஓபிஎஸ் பக்கம் சாயக்கூடுமோ என்ற மேஜர் டவுட் ஒன்று தென்மண்டலங்களில் கிளம்பி உள்ளதாம்.. இவை அனைத்தையும் பொறுமையாக கவனித்து வரும் எடப்பாடி பழனிசாமி, எகிறி அடித்து தன் ஆளுமையை நிரூபிக்க ரெடியாகி வருவதாக தெரிகிறது.. சசிகலா மீதான் சாஃப்ட் கார்னர் உள்ளவர் செல்லூர் என்ற விஷயத்தை நன்றாகவே அறிந்துள்ள நிலையில்தான், சட்டசப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியைகூட இவருக்கு தராமல் தவிர்த்திருக்கலாம் என்றும் முணுமுணுப்புகள் எழுகின்றன..!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications