"ஹாட்ரிக்".. 20 சீட்டாமே.. பாஜகவுக்கு 10 கன்பார்ம் போல.. யாரு எடப்பாடியா? விழிக்கும் திராவிட கட்சிகள்
தமிழக பாஜக போட்டியிட போகும் 10 தொகுதிகள் குறித்த தகவல் ஒன்று பரபரத்து வருகிறது
சென்னை: 3 விதமான அதிரடிகளுக்கு திட்டமிட்டு, தமிழக பாஜக காய்நகர்த்தி வரும் நிலையில், இன்னொரு தகவல் ஒன்று அரசியல் களத்தில் பறந்து கொண்டிருக்கிறது....!
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவின் எழுச்சியானது, தமிழக பாஜகவுக்கு, பெருத்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்து வலுவாகவே தந்து கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால், இந்த தேர்தல் ரிசல்ட் வந்தபிறகுதான், அதிமுகவில் உட்கட்சி பஞ்சாயத்துகள் தலைதூக்கவும், பாஜக தன்னுடைய "சவுண்ட்" அதிகப்படுத்தியது... திமுகவுக்கு எதிரான தன்னுடைய போராட்டங்களையும் அதிகப்படுத்தி, தமிழகத்தின் எதிர்க்கட்சி தாங்கள்தான் என்பதையும் மார்தட்டிக் கொள்ள ஆரம்பித்தது.

சீக்ரெட் ரூட்
"எப்போதுமே தனித்து போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்" என்று நகர்ப்புற தேர்தல் ரிசல்ட் கிடைத்த அன்றைய தினமே, பிரதமர் மோடி அண்ணாமலையிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்ட நிலையில், அதே ரூட்டிலேயே பாஜக தற்போது சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. ஒருபக்கம் அதிமுக விவகாரங்களில் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருப்பதுடன், மற்றொருபக்கம் திமுகவுக்கு டஃப் தந்துகொண்டுமிருக்கிறது.

டஃப் அமித்ஷா
அதுமட்டுமல்ல, கடந்த முறை அமித்ஷா சென்னைக்கு வந்தபோது, தமிழக பாஜக தலைவர்களிடம், நிலவரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. தன்னுடைய நிர்வாகிகளிடம், "பாஜவுக்கு திமுகதான் நம்பர் ஒன் எதிரி.. அதனால் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.. இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்.. என்ன செய்வீங்களோ தெரியாது, வரப்போகும் எம்பி தேர்தலில் தமிழகத்தில் குறைந்தது 5 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிவிட்டு போனதாககூட செய்திகள் பரபரத்தன..

ஹாட்ரிக்
அமித்ஷா வந்து போனபிறகு, 3 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளதாம் தமிழக பாஜக.. ஒன்று, மாற்று கட்சியில் இருந்து அதிருப்தியாளர்களை பாஜகவுக்கு கொண்டு வருவது, அடுத்து, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, அதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளையாவது வென்றெடுப்பது, அடுத்து, பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்து காட்ட வேண்டும் என்பதே அந்த 3 பிளான்களாம்..

ஹாட் ட்ரிக்
தமிழகத்தில் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்ற மாயையை கட்டவிழ்த்து விட்டுள்ளதில், பாஜக அந்த யுக்தியில் ஓரளவு வெற்றியை பெற்றுள்ளதாக சொல்கிறார்கள்.. அடுத்ததாக, மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலையை வீசியதில், சில முக்கிய புள்ளிகளும் அதில் தற்போது சிக்கி உள்ளதாக தெரிகிறது.. இதுபோக, திமுகவை எதிர்ப்பதில் ஆவேசமாக உள்ளதால், பாஜகவின் செல்வாக்கு அடிப்படையிலேயே சில மாதங்களாவே, உயர்ந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.. இப்படி வெறும் 6 மாதத்தில் ஹாட்ரிக் அடித்துள்ளது தமிழக பாஜக.

25 ஸ்பாட்கள்?
எனினும், 5 இடங்களில் பாஜக வென்றாக வேண்டும் என்று அமித்ஷா கண்டிஷன் போட்டதையடுத்துதான், 25 இடங்களுக்கு குறி வைத்து காய் நகர்த்த வேண்டும் என்றும் அண்ணாமலை கறாராக நிர்வாகிகளிடம் சொன்னாராம்.. 25 இடங்களுக்கு குறி வைத்தால்தான், 5-ல் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றும் பலமாக நம்புகிறாராம்.. ஆனால், 10 எம்பி தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவது என்பதில் பாஜக மூத்த தலைவர்கள் தெள்ளத்தெளிவாக இருப்பதாக தெரிகிறது.. இதற்காக பல்வேறு கோணங்களிலும் 39 தொகுதிகளிலும் டீமை இறக்கி, பல்வேறு கட்டமான ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

டாப் 10 தொகுதிகள்
அந்த ஆய்வுகளின்படி மொத்தம் 10 தொகுதிகளை டாப் லிஸ்ட் போட்டு மேலிடத்துக்கு தந்தார்களாம்.. அதன் அடிப்படையில் தென் சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கூட தேர்ந்து எடுத்து விட்டார்களாம்... விரைவில் அவர்கள் மூலம் புதிய நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன... அதுமட்டுமல்ல, பணத்தையும், தண்ணீராக செலவழிக்க போகிறார்களாம்..

பசை பசை தாராளம்
சும்மாவே பாஜக "தாராளம்" காட்டும் என்றாலும், இந்த முறை கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி உள்ளதால் தாராளங்களுக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள்.. இதற்கு நடுவில் இன்னொரு பேச்சும் அடிபடுகிறது.. திமுகவின் அதிகார பலத்தை சமாளிக்க வேண்டுமானால் பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுக அணிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்பதில் பாஜக கடந்த சில நாட்களாகவே முனைப்பு காட்ட துவங்கிவிட்டது.. இது ஒர்க் அவுட் ஆகும்பட்சத்தில், அதிமுக கூட்டணியில் இந்தமுறை 20 சீட்டுக்களையாவது கேட்டுப்பெறும் முடிவில் இருக்கிறதாம் பாஜக.. டபுள் டிஜிட் சீட்டுக்களை வழங்க எடப்பாடி ஓகே சொல்வாரா? தெரியவில்லை பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications