“20-30 MLAக்கள் வருவார்கள்.. சிலர் அமைச்சர்களாகவும் ஆவார்கள்”- நயினார் நாகேந்திரன் பேச்சால் குழப்பம்
சென்னை: "எங்களுக்கு 20, 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன். இங்கிருந்து அமைச்சர்களாககூட வருவார்கள். இறைவன் நினைத்தல் நிச்சயமாக நடக்கும்" என சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் பாஜக தேர்தல் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அமமுக துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இன்று பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நடக்கும் ஆட்சியை அகற்றப்பட்ட வேண்டும்.
இது ஆட்சியே இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. முறையாக டிஜிபி கூட இல்லை. டிஜிபியை கூட அவர்களால் நியமனம் செய்ய முடியவில்லை. பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டு இருக்கிறது. பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பே இல்லை. திமுக அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை. அவர்களைப் பொறுத்தவரை நோட்டை கொடுத்து ஓட்டை வாங்கி விடலாம் என இருக்கிறார்கள்” என்றார்.
மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை டபுள் இஞ்சின் சர்க்கார் தான் சரியாக இருக்கும். அப்போதுதான் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறைவேற்ற முடியும். பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.
முன்னதாக நிகழ்வில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பாஜகவில் பலரும் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அதன்பிறகு பேசிய நயினார் நாகேந்திரன், "சட்டசபை தேர்தலுக்குப் பின், பாஜகவில் இருந்து 20-30 எம்.எல்.ஏக்கள் வருவார்கள், சிலர் அமைச்சர்களாகவும் ஆவார்கள்" எனக் கூறியுள்ளார். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என பழனிசாமி கூறி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் பேச்சால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications