வருது..வருது! வெறும் 2 மணி நேரம் தான்..சென்னை டூ பெங்களூர்..அதிவேக ரயில்..ஸ்பீடு எவ்ளோ தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - பெங்களூர் இடையே தற்போது அதிவேக ரயிலாக வந்தே பாரத் உள்ளிட்டவை இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்டின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான இந்த ரூட்டில், அதிவேக ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

தென் இந்தியாவின் மிக முக்கிய நகரங்களாக சென்னை - பெங்களூர் உள்ளது. ஆசியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படும் சென்னையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் நிரம்பியுள்ளன. அதேபோல், இந்தியாவின் சிலிக்கான் நகரம் என்று சொல்லப்படும் பெங்களூரிலும் ஏராளமான ஐடி நகரங்கள் உள்ளன.

இந்த இரு நகரங்களுக்கும் இடையே தொழில் நிமித்தமாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். சாலை வழியாகவும் ரயில், விமானங்கள் மூலமாகவும் பயணிகள் இரு நகரங்களுக்கு இடையே அதிகம் பேர் பயணித்து வருகிறார்கள். இதனால் நாட்டின் மிக முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக இது உள்ளது.

 200 km per hour Southern Railway to introduce semi high speed train in Bangalore - Chennai route

செமி - ஹை ஸ்பீடு ரயில் இயக்க முடிவு: பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு சென்னை - பெங்களூர் வழியாக மைசூர் வரை வந்தே பாரத் ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதுபோக பெங்களூர்- சென்னை இடையே பல எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை - பெங்களூர் செல்ல ரயிலில் சராசரியாக சுமார் 6 மணி நேரம் ஆகிறது.

இதுவே வந்தே பாரத் ரயிலில் சென்றால் பயண நேரம் சுமார் 4.30 மணி நேரம் ஆகிறது. எனினும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பயணிகள் நேரம் மிச்சமாகும் வகையில் அதி விரைவு ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்க ரயில்வே ஆலோசித்து வருகிறது. அந்த வகையில், சென்னை - பெங்களூர் இடையே மணிக்கு 200 கி.மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய செமி - ஹை ஸ்பீடு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. 16 பெட்டிகளை கொண்டதாக இந்த ரயில் இருக்கும் எனவும் அனைத்தும் முன்பதிவு செய்து பயணிக்கும் பெட்டிகளாக இருக்கும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் சொல்கின்றன. 16 பெட்டிகளில் இரண்டு பெட்டிகள் எக்ஸிகியூட்டிவ் கோச்களாக இருக்கும்.

2 மணி நேரத்தில் செல்ல முடியும்: இந்த ரயிலானது பெங்களூரில் இருந்து சென்னைக்கு வெறும் 2 மணி நேரம் 15 நிமிடத்தில் வந்து சேரும். இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் போது இரு நகரங்களுக்கு இடையேயான பொருளாதார செயல்பாடுகள் ஊக்கம் பெறுவதோடு, பயணிகள் இரு நகரங்களுக்கும் வேகமாக சென்று வர முடியும். இதனால் அவர்களின் நேரம் மிச்சப்படும். இந்த அதிவேக ரயிலை இயக்குவதற்கான சர்வேயை மேற்கொள்ள ரயில்வே 8.30 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

 200 km per hour Southern Railway to introduce semi high speed train in Bangalore - Chennai route

பெங்களூர் பையப்பனஹள்ளியில் இருந்து சென்னை வரை உள்ள 350 கி.மீட்டர் நீள வழித்தடத்தில் ரயில் 200 கி. மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில் டிராக்குகளை மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த தண்டவாள வழித்தடம் மேம்படுத்தும் பணி நடப்பு ஆண்டு இறுதிக்குள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவின் அதிவேக ரயிலாக இது இருக்கும்.

320 கி.மீ வேகத்தில் இயக்க திட்டம்?: இது மட்டும் இன்றி அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூர் - சென்னை இடையே மணிக்கு 320 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில்களை இயக்கவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் சென்னை - பெங்களூர் இடையே வெறும் 1 மணி நேரத்தில் செல்ல முடியும். அதாவது விமான பயணத்திற்கு நிகராக நேரம் குறையும்.

தெற்கு ரயில்வே இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பொருளாதாரமும் பெருமளவு வளர்ச்சி பெறும் என்பதோடு பயணிகளின் நேரமும் பெருமளவு மிச்சம் ஆகும். ரயிலின் வேகத்தை அதிகரித்து நேரத்தை மிச்சப்படுத்த ரயில்வே ஆலோசித்து வரும் அதேவேளையில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே இதுபோன்ற ரயில்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+