செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கனடி உபரி நீர் திறப்பு- சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளம்!
சென்னை: சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மக்களுக்கு செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு என்றாலே ஒருவித அச்சம் இயல்பாக வந்துவிடுகிறது. 2015-ம் ஆண்டு பெருமழையின் போது அஜாக்கிரதையாக செயல்பட்டு செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்துவிடப்பட்டதால் சென்னை மக்கள் எதிர்கொண்ட வெள்ள துயரம்தான் இதற்கு காரணம்.
தற்போதும் சென்னையில் பெருமழை கொட்டி தீர்த்திருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. தற்போது 22 அடி உயரத்தை நீர்மட்டம் தொட்டதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் முதல் கட்டமாக 2-வது மதகில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதற்காக 3 முறை சீரான இடைவெளியில் முன்னெச்சரிக்கையாக ஒலிகள் எழுப்பப்பட்டன. பின்னர் சில மணிநேரங்களில் கூடுதலாக 500 கன அடி நீர் என மொத்தம் 1,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் மாலையில் 2,000 கனடி நீர் திறந்துவிடப்பட்டது.

அடையாறு ஆற்றில்...
செம்பரம்பாக்கம் ஏரியானது கடல் மட்டத்தில் இருந்து 65 அடி உயரத்தில் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீர் அடையாறு ஆற்றில் கலந்து சென்னை நகருக்குள் பாய்ந்து திருவிக பாலம் அருகே வங்க கடலில் கலக்கிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான குன்றத்தூர், திருநீர்மலை, விமான நிலையம், நந்தம்பாக்கம், ராமாவரம், கிண்டி, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மழைகாலங்களில் அடையாற்றில் வெள்ள நீர் ஓடினாலே கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கும்.

செம்பரம்பாக்கம் படிப்பினை
2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி நீரை அப்போதைய அதிமுக அரசு திடீரென இரவோடு இரவாக திறந்துவிட்டதால் இந்த பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாமல் 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறந்துவிடப்பட்டது. சென்னைவாசிகள் இதனை இப்போது நினைத்தாலும் அதிர்ச்சியில் உறைந்து போகவே செய்கின்றன. தற்போது 2015-ம் ஆண்டு நிகழ்வுகளை படிப்பினையாக கொண்டு உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுடன் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நீர் திறப்பு அதிகரிக்கப்படும்
தற்போதைய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு மொத்தம் 2,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் உபரி நீர் திறப்பும் மேலும் அதிகரிக்கப்படும். இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளை முழு வீச்சில் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மிகவும் தாழ்வான பகுதிகள், அடையாற்று வெள்ள நீரில் மூழ்கக் கூடிய குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications