Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியே எதிர்பார்க்கலயே.. "விடுங்கண்ணே வரேன்".. தெம்பு தந்த விஐபி.. டெல்லி பறக்கும் ஓபிஎஸ்.. ஏன்?

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பக்கம் சென்றவர்களை இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைகோர்ட் உத்தரவுக்கு பிறகு, ஓபிஎஸ் + சசிகலா டீம் சைலண்ட்டாக உள்ளதாம்.. அதற்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமி, தன் பணியில் வேகம் எடுத்து வருகிறார்.

கோர்ட் வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.. ஓபிஎஸ் அப்பீலுக்கு போக போகிறார்.. இந்த வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பு எப்போது வரும் என்று தெரியாது..

ஆனால், அப்படியே எம்பி தேர்தல் வரை இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்கிறார்கள். கோர்ட் விவகாரங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் கட்சியை பலப்படுத்தும் விஷயங்களில் ஓபிஎஸ் - எடப்பாடி டீம் இறங்கி உள்ளது..

 ஷாப்பிங் மால்

ஷாப்பிங் மால்

இதில் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, தன்னுடைய பலத்தை தக்க வைத்து கொள்வதில்தான் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.. காரணம், ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்டும் பட்சத்தில், தன் பக்கமுள்ள ஆதரவாளர்களை விலைக்கு வாங்கினால் என்ன செய்வது? சசிகலாவும் இந்த விஷயத்தில் மறைமுகமாக இறங்கி இருப்பதாக செய்திகள் கசிவதால், அவர்களை இழுத்து பிடித்து வைத்துக் கொள்ளும் யுக்தியை கையில் எடுத்துள்ளாராம்.. அதுமட்டுமல்ல, ஒன்றிரண்டு பேர் மனம்மாறி ஓபிஎஸ் பக்கம் சென்றுவிட்ட நிலையில், அவர்களையும் தன்பக்கம் கொண்டு வர, தூது அனுப்பி உள்ளாராம்..

 அண்ணே.. மாஜி

அண்ணே.. மாஜி

இதில் ஒரு "மாஜி"யின் மனம் கரைந்துவிட்டதாம்.. "என் ஆதரவு உங்களுக்குதான் அண்ணே.. பொய் தகவல்கள் எல்லாம் வெளிவரும், எதையும் நம்பாதீங்க" என்று எடப்பாடியிடமே போனை போட்டு தெம்பூட்டி பேசினாராம். அதேபோல் ஓபிஎஸ் டீமை பொறுத்தவரை, சற்று அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.. ஓபிஎஸ்ஸைவிட சசிகலா மிகவும் அதிருப்தியில் இருக்கிறாராம்.. கடந்த முறை தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியபோது, அளவுகடந்த குஷிக்கு சென்றாராம் சசிகலா..

 டோட்டல் சேஞ்ச்

டோட்டல் சேஞ்ச்

இந்த உத்தரவானது எடப்பாடி பழனிசாமிக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டதால், தன்னுடைய பிறந்தநாள் விழாவையே, சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடினார் சசிகலா.. அந்த அளவுக்கு எடப்பாடியின் வீழ்ச்சி, சசியை தெம்பூட்டிய நிலையில், இந்த முறை அப்படியே டோட்டலாக நீதிமன்ற உத்தரவு மாறிவிட்டது. இதனால், சில விஷயங்கள் அடுத்தக்கட்டம் செல்ல முடியாமல் அப்படியே தேங்கி நிற்பதாக கூறப்படுகிறது..

 27 மாவட்ட செயலாளர்கள்

27 மாவட்ட செயலாளர்கள்

கடந்த வாரம், 27 மாவட்ட செயலாளர்களிடம் சசிகலாவே பேச்சுவார்த்தை நடத்தி, ஓபிஎஸ் தரப்புக்கு வரவழைக்கும் முயற்சியில் இறங்கியதாக செய்திகள் வந்தன.. ஆனால், இந்த பணி அப்படியே நிற்கிறதாம்.. ஓபிஎஸ் டீமுக்கு வருவதாக சொல்லி கொண்டிருந்த, சில முக்கிய நிர்வாகிகளும் இப்போது சைலண்ட்டாக ஒதுங்கி செல்கிறார்களாம்.. அதனால்தான், அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனைகள் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் நடந்து வருகிறது.. அந்தவகையில், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மீண்டும் துவக்கி உள்ளாராம் ஓபிஎஸ்.. அதாவது, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு, புதிய மாவட்ட செயலர்களை நியமித்திருந்தார்..

 அகலாத குழப்பம்

அகலாத குழப்பம்

இந்த சமயத்தில்தான், தனி நீதிபதி, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன், கட்சியின் பழைய நிலையே தொடர உத்தரவிட்டார். இதன்காரணமாக, ஓபிஎஸ் அறிவித்த புதிய நிர்வாகிகளால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது... இதனால் 2 தரப்பிலும் செயல்பாடுகள் ஸ்தம்பித்தன.. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி அப்பீலுக்கு போனார்.. இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது.

 டூர் ரெடி

டூர் ரெடி

இதனால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கமும் செல்லும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்துள்ளனர்.. இந்த தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் டெல்லி சுப்ரீம் கோர்ட் போகிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், மீதமுள்ள மாவட்டங்களுக்கும், தங்களுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணியை, ஓபிஎஸ் தரப்பு துரிதப்படுத்தி உள்ளது. புதிய நிர்வாகிகளை விரைவாக நியமிப்பதுடன், மாவட்ட வாரியாக ஓபிஎஸ் சுற்றுப்பயணமும் செல்ல திட்டமிட்டுள்ளார்...

 ஸ்டார்ட் + ஸ்மார்ட்

ஸ்டார்ட் + ஸ்மார்ட்

வரும் 15ம் தேதி, காஞ்சிபுரத்தில் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டவுடனேயே, இந்த சுற்றுப்பயணம் ஆரம்பமாகும் என்றும், நிர்வாகிகள், பொறுப்பில் உள்ளவர்கள், முக்கிய ஆதரவாளர்கள் என கிட்டத்தட்ட 2000 பேரையாவது நேரில் சந்தித்து ஆலோசிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்களாம்.. அதுமட்டுமல்ல, தற்சமயம் வந்துள்ள தீர்ப்பு காரணமாக, யாரும் தங்கள் பக்கம் வர வாய்ப்பு இல்லை என்பதாலும், இனி அடுத்தடுத்து கோர்ட் விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டி உள்ளதாலும், ஓபிஎஸ் டீம், அடுத்தக்கட்ட சமாச்சாரங்களில் பிஸியாகிவிட்டது.. இப்படி புது புது தகவல்கள் வட்டமடித்து வரும் நிலையில், வழக்கம்போல அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+