Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000.. டியூஷன் அக்கா திட்டம்.. மேஜர் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்றும் இந்தப் பணம் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. மக்கள் நலன், பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நீதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

congress election manifesto

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான குழு, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்ட இந்த 26 பேர் கொண்ட குழு, கடந்த சில மாதங்களாகத் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

குறிப்பாக இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் சிறுதொழில் முனைவோரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 'மக்களின் குரலே காங்கிரஸின் அறிக்கை' என்ற தாரக மந்திரத்தோடு கார்த்தி சிதம்பரம் தலைமையிலான குழு இந்த தேர்தல் அறிக்கையை வடிவமைத்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இந்த அறிக்கையை சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களைப் போலவே, தமிழகத்திலும் ஒரு சிறந்த ஆட்சி அமைய இந்தத் தேர்தல் அறிக்கை வழிகாட்டும் என்று தெரிவித்தார்.

congress election manifesto

முக்கிய வாக்குறுதிகள்

இந்தத் தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மாநில உரிமைகளைப் பாதுகாத்தல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதிய உத்திகளைப் புகுத்துதல் போன்றவை இதில் முதன்மையானவை. குறிப்பாக, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் திட்டங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகளில் இந்த தேர்தல் அறிக்கையை முன்வைத்து மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது. பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கவனம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:

1. ஒவ்வொரு குடும்பத்திற்கும், மாதம் 2000 பணம் மகளிரின் பெயரில் வரவு வைக்கப்படும். குடும்ப அட்டைகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த பணம் கிடைக்கும்.

2. முதியோர் உதவித்தொகை 2000 ஆக உயர்த்தப்படும். மாற்றுததிறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3. நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படும்.

4. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும்.

5. வருவாய் குறைந்த குடும்ப மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்படும்.

6. அரசுப் பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கற்பிக்கப்படும். ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி வழங்கப்படும்.

7. காலியான 3 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

8. காவல்துறையி்ல 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

9. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும்.

10. ஒரே குடையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

11. 6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.

12. தமிழகம் ஆன்மிக சுற்றுலா நகராக மாற்றப்படும்.

13. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் மன நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

14. 2030க்குள் ரேபிஸ் மரணங்கள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும். நாய்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி, கருத்தடை மருந்துகள் அளிக்கப்படும்.

15. மனநல முதலுதவி செய்ய 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி.

16. விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக வாரியம் அமைக்கப்படும்.

17. ஆரம்ப சுகாதார மைய வலயைமைப்பு பலப்படுத்தப்படும்.

18. பாசனக் கால்வாய்கள் மீட்டெடுக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும்.

19. இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும்.

20. முக்கிய நகரங்களில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை.

21. குறைந்த விலையில் வீடுகள், விரைவான நிலப்பட்டா வழங்கப்படும். என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+