Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2015 வெள்ளத்திலும் சரி, 2023 வெள்ளத்திலும் சரி, சென்னையில் இதை கவனித்தீர்களா.. மறக்கவே கூடாத பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015 சென்னை வெள்ளமும், 2018 கேரள வெள்ளமும்(எர்ணாகுளம்), 2023ல் இப்போது நடந்த சென்னை வெள்ளமும் சில பாடங்களை மக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளன. அதில் முக்கியமாக கவனிக்க மறந்த ஒரு விஷயம் என்னவென்றால், தொலைதொடர்பு சேவைகள் முற்றிலும் செயல் இழந்து போவது தான்.

சென்னையில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை பெய்த பெருமழை காரணமாக திங்கள் முதல் புதன்கிழமை வரை மூன்று நாட்கள் முற்றிலுமாக சென்னையில் பல இடங்களில் சிக்னல்கள் வேலை செய்யவில்லை. சென்னையில் இணையதள சேவை முற்றிலும் முடங்கிப்போனது. இதன் காரணமாக யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

செல்போன் சிக்னல்கள் வேலை செய்யாத காரணத்தால், அரசு அறிவித்த அவசர எண்களை தொடர்பு கொள்ளக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. சென்னை முழுவதும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அழைக்க முடியவில்லை. மின்சாரம் இல்லை... கையில் பணம் எடுத்து வைக்காத மக்கள், ஏடிஎம்களில் போய் பணமும் எடுக்க முடியவில்லை.. காரணம் ஏடிஎம்கள் எதுமே இணையதள சேவை இல்லாததால் வேலை செய்யவில்லை. இணையதள சேவை மட்டுமல்ல... மின்சாரமும் சுத்தமாக இல்லை என்பதால் எங்குமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது- ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் வழி இல்லை. கையிலும் பணம் இல்லை.. செல்போனில் சிக்னலும் இல்லை. உணவு வாங்க வழியும் இல்லை என்கிற நிலை, சென்னை முழுவதுமே ஏற்பட்டது.

2015, 2018, 2023 floods taught people One major important lesson ? Do you know what it is?

சென்னை பகுதியை பொறுத்தவரை வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, புழுதிவாக்கம், ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கேகேநகர், நெசப்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி, பெரும்பாக்கம், மேடவாக்கம்,பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம் தண்டையார்பேட்டை, கொளத்தூர், ஆவடி, செம்மஞ்சேரி என பெரும்பாலான பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தார்கள்.

சென்னையில் நேற்று தான் பல பகுதிகளில் செல்போன் சிக்னல்கள் வந்தன. நேற்று இரவு தான் சென்னையின் பல பகுதிகளுக்கு மின்சாரமும் வந்தது. இப்படியான நிலையில் கடந்த 3 நாட்களாக பலரும் செல்போன்களை எங்காவது மின்சாரம் உள்ள சில பகுதிகளுக்கு சென்று செல்போனை சார்ஜ் போட்டு உதவி கேட்டு அழைத்தார்கள். சிலர் அழைக்க முடியாத அளவிற்கும் வெள்ளத்தில் சிக்கினார்கள்.

சென்னையில் 2015 இல் ஏற்பட்ட வெள்ளமும் சரி, 2018ல் கேரளாவின் எர்ணாகுளம் (கொச்சி) உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களும் சரி, 2023 டிசம்பர் வெள்ளமும் சரி, கற்றுக்கொடுத்த ஒரே பாடம், தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் முடங்கிவிடும் என்பது தான். டவர்கள் எதுவும் வேலை செய்யாத காரணத்தால் 2015ல் ஏழு நாட்களுக்குமேல் மக்கள் அவதிப்பட்டார்கள். கேரளாவிலும் 2018 வெள்ளத்தின் போது இதேபோல் சில நாட்கள் செல்போன் சேவைகள் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது. இப்போது டிசம்பர் 2023 சென்னை வெள்ளமும் அவசரத்திற்கு கூட யாரையும் அழைக்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இவற்றிற்கு கண்டிப்பாக வரும் காலத்தில் தீர்வுகளை காண வேண்டும். டிஜிட்டலுக்கு எல்லாமே மாறினாலும். செல்போன்,இணையதள சேவைகள், மின்சார சேவைகள் முடங்கினால், அதற்கான மாற்றுத்தீர்வுகளை முன் வைக்க வேண்டும். அவசர கால உதவி மையங்களை மழை வெள்ளம் ஏற்பட போகிறது என்றால் உடனடியாக அங்கு தற்காலிகமாக முகாம்களை அமைக்க வேண்டும். இணைதளம், மின்சாரம் என எது தடைபட்டாலும், மக்களை கூப்பிடும் தூரத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான உதவிகளை பெற வழிகளை உருவாக்க வேண்டும்.. அவசர உதவி மையங்கள் அந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும்.

அதேபோல் ஏரிக்கரைகள் உடைந்து நீர் வெளியேறும் வரை அமைதியாக இருப்பதும் ஆபத்தானது என்பது இந்த மழை மக்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம். ஏரி நிறைந்த பின்னர், அந்த தண்ணீர் பாதுகாப்பாக வெளியேற வழிகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும். அதற்கு இடையூராக வீடுகள் , கட்டிடங்கள் என எவை கட்டப்பட்டிருந்தாலும், இரும்பு கரம் கொண்டு இடித்து, தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். இதுதான் கற்றுத்தந்த பாடம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+