2021-ல் தப்பிய வரலாறு! இம்முறை கைகொடுக்குமா? விஜய்யின் விஸ்வரூபத்தால் நிலைகுலைந்த திராவிட கோட்டைகள்?
சென்னை: எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தற்பொழுது பெரும் குழப்பத்திலும் விவாதத்திலும் ஆழ்ந்துள்ளன. வாக்குப்பதிவு முடிந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் வேளையில், வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட முரண்பட்ட தகவல்கள் கள நிலவரத்தை இன்னும் சூடாக்கியுள்ளன.
நேற்று முன்தினம் எக்ஸில் போல்கள் வெளியாகின.. இதனால் ஒருபுறம் ஆளுங்கட்சியான திமுக தன் வெற்றியை உறுதி என நம்பிக் கொண்டிருக்க, மறுபுறம் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளின் வாக்கு சதவீதம் குறித்த கணிப்புகள் ஆச்சரியமான திருப்பங்களைக் காட்டியுள்ளன.

குழப்பிவிட்டு போன எக்ஸிட் போல்
குறிப்பாக, இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்கள் வரை பிடித்து ஆட்சிக்கே வர வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், அதிமுக கூட்டணி மிகக்குறைவாக 22 முதல் 32 இடங்களையும் பெறும் என அந்த நிறுவனம் தெரிவித்திருப்பது திராவிடக் கட்சிகளின் கோட்டையில் ஒரு புதிய சக்தி விரிசலை ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
விஜய் விஸ்வரூபம்
குறிப்பாக, இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாகக் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 98 முதல் 120 இடங்கள் வரை பிடித்து ஆட்சிக்கே வர வாய்ப்புள்ளதாக அக்கணிப்பு கூறுகிறது.
இதனால் திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், அதிமுக கூட்டணி வெறும் 22 முதல் 32 இடங்களையும் மட்டுமே பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை ஒரு புதிய சக்தி தகர்க்கப் போகிறதா என்ற சந்தேகம் இப்போதே தொற்றிக் கொண்டுள்ளது.
2016 தேர்தல் வரலாறு
இருந்தாலும் இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் பல முறை தமிழக வாக்காளர்களின் இறுதி முடிவை சரியாகப் பிரதிபலிக்காதது கடந்த காலத் தேர்தல்களில் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
இதற்கு உதாரணமாக 2016ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை சொல்லலாம். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள் திமுக கூட்டணி 140 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றே அடித்துச் சொல்லின. குறிப்பாக, முன்னணி நிறுவனங்களான இந்தியா டுடே மற்றும் சாணக்யா போன்றவை திமுகவின் வெற்றியை உறுதி செய்தன.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது அனைத்துக் கணிப்புகளும் தலைகீழாக மாறின.. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 136 இடங்களை வென்று, 1984-க்குப் பிறகு ஆளுங்கட்சியாகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்து வரலாற்று தனை படைத்தது.
2021 தேர்தல் கணிப்பு
ஆனால், 2021ம் ஆண்டு தேர்தலில் கணிப்புகள் ஓரளவுக்கு பலித்தது.. . பெரும்பாலான நிறுவனங்கள் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்தபடியே, திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
இருந்தாலும், சில நிறுவனங்கள் திமுக 180 முதல் 200 இடங்கள் வரை பெரும் வெற்றியைப் பெறும் என்று அன்று மிகைப்படுத்திக் கூறியிருந்ததையும். அதேசமயம் களத்தில் அதிமுக 75 இடங்களைப் பிடித்து ஒரு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்ததையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
ஆட்சியில் பங்கு கேட்போம்
தற்போது வெளியான எக்ஸிட் போல் முடிவுகளுக்கு பிறகு லேசான குழப்பம், தமிழக கட்சிகளிடம் தொற்றிக் கொண்டுள்ளது.. இந்தக் குழப்பமான சூழலில் முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை அறிவாலயத்தில் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியது கவனம் பெற்றுள்ளது.. அதேபோல தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் "ஆட்சியில் பங்கு கேட்போம்" என்று சொல்லி உள்ளது, கூடுதல் பரபரப்பை தந்துள்ளது.
மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் வெளியான இந்தக் கருத்துக்கணிப்புகளை முற்றிலும் நிராகரித்துள்ளார். அதிமுக 210 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ள அவர், திமுகவினர் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி முறைகேடுகளைச் செய்யத் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதில் இப்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு., விஜய்யின் சினிமா வெளிச்சம் என்பது உண்மையான அரசியல் வாக்குகளாக மாறியுள்ளதா அல்லது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் இந்த புதிய சக்தி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுதான்.
திரிசங்கு நிலைமை
களத்தில் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு, வெளியில் தெரியும் அரசியல் "சத்தங்களை" காட்டிலும் வேறொரு சர்ப்ரைஸ் முடிவை நோக்கி நகர்ந்துள்ளதா என்பது வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தெரியவரும். மும்முனைப் போட்டி நிலவும் சூழலில் வாக்குகள் சிதறினால், அது யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத ஒரு திரிசங்கு நிலைக்கும் வழிவகுக்கலாம் என்ற அச்சமும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.
நம்முடைய தமிழக வாக்காளர்கள் எப்போதும் ஒரு அமைதியான புரட்சியை செய்வதில் வல்லவர்கள். 2016-ல் நிலவிய அதே சூழல் மீண்டும் திரும்புமா அல்லது 2021-ஐப் போல கணிப்புகள் பலிக்குமா தெரியவில்லை.. ஏனென்றால் எக்ஸிட் போல் தரவுகளை விட மக்களின் மவுனமான தீர்ப்பே வலுவானதாக இருக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்!!












Click it and Unblock the Notifications