2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள்
சென்னை: 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகளை மண்டலம் வாரியாக பார்த்தால் வடக்கு மண்டலத்தில் 69 தொகுதிகள் உள்ளன. மேற்கு கொங்கு மண்டலத்தில் 68 தொகுதிகள் உள்ளன. தெற்கு மண்டலம் - 51 தொகுதிகள் உள்ளன. மத்திய மண்டலம் - 46 தொகுதிகள் உள்ளன, இதில் எந்த மண்டலத்தில் 2021 சட்டசபை தேர்தலில் திமுக அதிகம் வெற்றி பெற்றது. எந்த மண்டலத்தில் அதிமுக வென்றது என்பதை பார்ப்போம். இதில் சென்னை, டெல்டாவில் தோற்றதுதான் அதிமுக ஆட்சிக்கு வர முடியாமல் போக காரணமாக அமைந்தது.
2021 சட்டசபை தேர்தலில் வென்ற திமுக, 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அதிமுக தோல்வியை தழுவினாலும் வலுவான எதிர்க்கட்சியாகவே அமர்ந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே வெறும் 2 சதவீதம் தான் வாக்கு வித்தியாசம் அப்போது இருந்தது. அதில் தான் வெற்றி தோல்விகள் மாறியிருந்தன.

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தால், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுக சந்தித்த பெரும் வீழ்ச்சிதான் அந்த ஆட்சியை மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தது. அதாவது திமுக ஆட்சியை கைப்பற்ற காரணமாக அமைந்தது.
வடக்கு மண்டலம்
தமிழக அரசியலில் "மண்டலங்கள்" தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன. 2021-ல் திமுக மற்றும் அதிமுக பெற்ற இடங்களை மண்டல வாரியாக பார்ப்போம். 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகளை மண்டலம் வாரியாக பார்த்தால் வடக்கு மண்டலத்தில் 69 தொகுதிகள் உள்ளன. இதில் திமுக கூட்டணி 46 இடங்களில் வென்றது. அதிமுக கூட்டணி 23 இடங்களில் வென்றது.
மேற்கு தெற்கு
மேற்கே கொங்கு மண்டலத்தில் 68 தொகுதிகள் உள்ளன. இதில் திமுக கூட்டணி 23 இடங்களில் வென்றது. அதிமுக கூட்டணி 45 இடங்களில் வென்றது. தெற்கு மண்டலத்தில் 51 இடங்கள் உள்ளன. இதில் திமுக கூட்டணி 33 இடங்களில் வென்றது. அதிமுக கூட்டணி 18 இடங்களில் வென்றது. மத்திய மண்டலததில் 46 இடங்கள் உள்ளன. இதில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றது. 8 இடங்களில் அதிமுக கூட்டணி வென்றது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளில் 159 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது.
அதிமுக ஆட்சியை இழந்ததற்கான முக்கிய காரணம்
சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக கூட்டணி முழுமையாகக் கைப்பற்றியது. தலைநகரில் அதிமுக ஒரு இடத்தைக்கூடப் பிடிக்க முடியாமல் போனது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அதேபோல் மத்திய மண்டலம் எனப்படும் காவிரி டெல்டா மாவட்டங்களில் (தஞ்சை, திருவாரூர், நாகை) திமுக மிக வலிமையாகச் செயல்பட்டது. டெல்டாவில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை திமுக அள்ளியது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து 10 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. அதிமுகவுக்கு ஒரு தொகுதிகூடக் கிடைக்கவில்லை. அதிமுகவின் கோட்டை என்று போற்றப்படும் இடங்களில் கூட அதிமுக அப்போது ஜெயிக்கவில்லை.. விவசாயப் பிரச்சனைகள் மற்றும் ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டங்கள் அதிமுகவுக்கு எதிராகத் திரும்பியிருந்தன.
வடக்கு மண்டலத்தில் திமுகவின் எழுச்சி
அதிமுக - பாமக கூட்டணி வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தால், ஒட்டுமொத்தமாக மற்ற சமூகங்களின் வாக்குகள் ஒருங்கிணைந்தது தான் வடக்கிலும் திமுக 65% இடங்களைக் கைப்பற்ற காரணமாக அமைந்தது.
அதிமுகவிற்கு ஆறுதல் கொங்கு மண்டலம்
அதிமுகவின் ஒரே ஆறுதல் மேற்கு மண்டலம் (கொங்கு) தான். எடப்பாடி பழனிசாமி அவர்களின் சொந்த செல்வாக்கு மற்றும் அந்தப் பகுதியில் செய்யப்பட்ட உட்கட்டமைப்புப் பணிகளால், மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி 45 இடங்களை வென்று தனது கோட்டையைத் தக்கவைத்துக்கொண்டது. அதிமுக அங்கு ஜெயிக்க எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்து ஆ ராசாவின் சர்ச்சை பேச்சும் ஒரு காரணம் என்று அப்போது வெகுவாக பேசப்பட்டது.
-
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications