தமிழக அரசியலில் இடைவிடாமல் சொல்லப்படும் வெற்றிடம்... நிஜந்தானா? பதில் தர காத்திருக்கும் 2021
சென்னை: தமிழக அரசியலில் இடைவிடாமல் ஏலம்விடப்படுகிற வெற்றிடம் என்பது உண்மையில் இருக்கிறதா? அல்லது இது கட்டமைக்கப்படுகிற பிம்பமா என்பதற்கு பதில் சொல்ல காத்திருக்கிறது 2021-ம் ஆண்டு.
Recommended Video
2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகளின் தலைவர்களான முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதலாவது சட்டசபை தேர்தல் இது.
இந்த இரு அரசியல் தலைவர்களும் மறைந்தது முதலே கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் தவறாமல் இடம்பெறும் சொல் வெற்றிடம். தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்பதை சகலரும் சொல்லி வருகின்றனர்.

உயிர்ப்புடன் கட்சி தலைமைகள்
இத்தனைக்கும் இந்த இருபெரும் தலைவர்களின் கட்சி அதே கட்டமைப்புடன் எந்தவித சிதைவும் இல்லாமல் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் கோலோச்சி வருகின்றன. இந்த இருபெரும் கட்சிகளை வழிநடத்துகிற அடுத்த தலைமைகளும் களத்தில் நின்று லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்களை எதிர்கொண்டிருக்கின்றன.

எது வெற்றிடம்?
தலைவர்கள்தான் மறைந்தார்களே தவிர கட்சிகள் அப்படியேதான் இருக்கின்றன.. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கின்றனர்.. கட்சிகளின் செயல்பாடுகளும் அப்படியே தொடருகின்றன. ஆனாலும் எங்கோ இருந்து ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்ற சொல்லை கண்டுபிடித்து இடைவிடாமல் பினாத்தி கொண்டிருக்கிறார்கள் சிலர்.

வெற்றிட முழக்கம்
இந்த தலைவர்கள் இல்லாத காலத்தில் புயலும் மழையும் வந்தது.. கொரோனா பேரழிவும் வந்திருக்கிறது.. தமிழகம் ஒன்றும் சுடுகாடாகிவிடவும் இல்லை.. தமிழகமே காணாமல் போய்விடவும் இல்லை. ஆனாலும் வெற்றிடம் என்கிற நாராச ஒப்பாரி மட்டும் ஓய்வில்லாமல் ஒலித்து கொண்டே இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டவர்களில் ஒன்றிரண்டு பேர்தான் களத்தில் இருக்கின்றனர்.

2021-ல் பதில் வரும்
பிரதானமாக முழக்கமாக இதை வைத்தவர்கள், அந்த வெற்றிடமே நான்தான்... என்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்றெல்லாம் மார்தட்டியவர்கள் தேர்தலுக்கு 6 மாதம்தான் இருக்கும் நிலையில் கூட அரசியலை எட்டிப் பார்க்கவே அஞ்சி ஏசி ரூம்களில் பதுங்கிக் கொண்டு பட்டாசு வெடிக்கிறார்கள். இந்த வாய்சவடால்களுக்கு வலிமையான பதிலைக் காத்திருக்கிறது 2021. ஆம் 2021 சட்டசபை தேர்தல்தான் வெற்றிடம் இருக்கிறதா? இல்லையா? என்கிற புதிரை அவிழ்க்கப் போகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications