பாஜக உடன் அதிமுகவிற்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை... திமுக கூட்டணி சிதறும்.. ஜெயக்குமார் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக உடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவிற்கு பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்திய அளவில் லோக்சபா தேர்தல் களம் அனலடிக்க ஆரம்பித்துள்ளது. கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அரசியல் வானில் பழைய கூட்டணி பிரிந்து புது கூட்டணி உருவாகிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின் போது போட்டியிட்ட அதே கட்சிகள் திமுக கூட்டணியில் நீடிக்கின்றன.

2024 lok sabha election: AIADMK has no relationship with BJP says Jayakumar

அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக பிரிந்து விட்டது. அதிமுக தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்து விட்டது. கூட்டணி பற்றி பேசுவதற்கு குழு அமைத்து ஆலோசனையை தொடங்கி விட்டது. ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரக் குழுவும் தொகுதி பங்கிட்டு குழுவும் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனை குழு கூட்டத்தில் ஒவ்வொரு அதிமுக ஆட்சிக்காலத்தின் பொழுதும் மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்களை மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு சேர்ப்பது, தேர்தல் பிரச்சாரங்களை திட்டமிடுவது, தெருமுனை கூட்டங்களை நடத்துவது என்பது குறித்தெல்லாம் தேர்தல் பிரச்சார குழுவும் தொகுதி பங்கிட்டு குழுவினருடன் கலந்து ஆலோசித்தனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எப்ப கேட்டாலும், எந்த நேரத்தில் கேட்டாலும், தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லையென உறுதிபட கூறினார். பாஜக என்ற பெட்டியை ரயிலில் இருந்து கழட்டி விட்டது விட்டது தான் என தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடக்காத விஷயத்தை சொல்லி திசை திருப்ப முயற்சிக்கிறார், இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது எனவும் கூறினார். அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளிவரும் எனக் கூறினார்.

திமுக கூட்டணியில் முரண்பாடுகள் அதிகம் இருப்பதாக கூறிய ஜெயக்குமார், இந்தியா கூட்டணி நெல்லிகாய் மூட்டை சிதறுவதுபோல் திமுக கூட்டணியும் சிதறும் என்றும் ஆருடம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+