2024 நாடாளுமன்றத் தேர்தல்! 5 தொகுதிகளுக்கு பாஜக குறி! நடைபயணம் பற்றி அண்ணாமலை டிஸ்கஷன்!
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எப்பாடுபட்டேனும் 5 தொகுதிகளில் வென்றுவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு களப்பணிகளை தொடங்கியுள்ளது பாஜக.
அதிமுகவிடம் 10 தொகுதிகள் வரை கேட்டுப் பெறுவது என்ற அஜெண்டாவோடு இருக்கும் பாஜக, 5 தொகுதிகளில் உறுதியாக வெல்ல வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது.
இதனிடையே பாஜக போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் கண்டு விரைவில் அங்கு நடைபயணம் நடத்துவது பற்றியும் அண்ணாமலை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 2 ஆண்டுகள் கூட இல்லாததால், நாடு முழுவதும் தேர்தல் முன்களப் பணிகளை பாஜக தொடங்கிவிட்டது. அந்த வகையில் தமிழகத்தின் மீது தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பாஜக தேசியத் தலைமை. அண்மையில் கூட பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக காரைக்குடி வந்து கட்சி நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கிச் சென்றார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

அதிமுக கூட்டணி
தமிழகத்தை பொறுத்தவரை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே கடந்த முறை போல் இல்லாமல் இம்முறை அதிமுகவிடம் 10 தொகுதிகள் வரை கேட்டுப்பெறும் திட்டத்தில் இருக்கிறார்கள் தமிழக பாஜக நிர்வாகிகள். இதில் எப்பாடுபட்டேனும் குறைந்தபட்சம் 5 தொகுதிகளிலாவது உறுதியாக வெற்றிபெற வேண்டும் என கணக்குப் போட்டு களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது தமிழக பாஜக.

தொகுதிகள் விவரம்
கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், தொகுதிகளில் பாஜக பரபரப்பாக சத்தமின்றி தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது. இன்னும் எஞ்சியுள்ள தொகுதிகளையும் விரைவில் அடையாளம் கண்டு அங்கும் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக போட்டியிட உத்தேசித்துள்ள தொகுதிகளில் நடைபயணம் செல்வது பற்றியும் அண்ணாமலை ஆலோசித்து வருவதாகவும் ஆனால் இதன் தாக்கம் எந்தளவு மக்கள் மத்தியில் இருக்கும் என்பதை பொறுத்து அவர் இதில் இறுதி முடிவெடுப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் வருவார்கள்
மத்திய அரசின் திட்டங்கள் பற்றி ஆய்வு செய்ய மத்திய அமைச்சர்கள் இனி அடிக்கடி தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மேற்கொண்ட வேல் யாத்திரை ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அப்போது பேசுபொருளாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications