ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். பிரம்மாண்ட கூட்டணி அமைத்து களத்தில் திமுக முன்னணியில் உள்ளது. இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு அது 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. [2026 Assembly election]

அதன்படி இன்று (மார்ச் 16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் பங்கேற்றனர்.
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு இன்னும் 39 நாட்களே உள்ளன. 200 தொகுதிகளில் நாம் வென்றாக வேண்டும்.குழப்பம் விளைவிப்போரின் சதியை முறியடித்து பலமான கூட்டணியை அமைத்துள்ளோம். 234 தொகுதிகளையும் கண்காணித்து வருகிறேன். அதிக எம்எல்ஏக்களை வெற்றி பெற்று தருவோருக்கே அமைச்சர் பதவி கொடுக்கப்படும். சீனியாரிட்டி இரண்டாம்பட்சம் தான் என்று பேசினார்.
மேலும், ஐந்தாண்டு திமுக ஆட்சியில் செய்த மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நான் நடத்திய அத்தனை கூட்டங்களையும் மாநாடாக மாற்றிய பெருமை உங்களையே சேரும். எந்த இடத்தில் வாக்கு குறைவாக இருக்கிறதோ அந்த இடத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் நேரடியாக சென்று பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கூட்டத்தில், அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளப்பட்டுள்ளது. கள நிலவரம், திமுகவின் பிரச்சார வியூகங்கள், எதிர்க்கட்சிகளை எப்படி கையாள வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications