2026 Assembly Election: அதிமுக, தவெகவை அசால்ட்டாக டீல் செய்யும் ஸ்டாலின்.. 2026 தேர்தல் குறித்து ஷார்ப் கணிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு (2026 Assembly Election) தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. மிகவும் வலுவான கூட்டணியாக கருதப்பட்ட திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்பதை கணித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தனி டிராக்கில் பயணித்து வருகிறது.

உரிமைக்கு குரல்
டெல்லியில் நேற்று காங்கிரஸ் மேலிடம், தமிழ்நாடு தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பிறகு திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்காததால் வருத்தத்தில் இருப்பதாக காங்கிரஸ் கூறியது. மறுபக்கம் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஸ்டாலின் இந்தியா டுடே நிகழ்ச்சி
பரபரப்பான நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியா டுடே நிகழ்ச்சியில் பேசும்போது, "உறவுக்கு கைக் கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பது கலைஞர் சொன்ன பழமொழி. அதுதான் பிரதமர் நரேந்திர மோடியுடனான உறவு. அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் என்னை அப்படித்தான் பார்க்கிறார். கலைஞரிடம் நான் கற்று கொண்டது உழைப்பு. அதையேதான் உதயநிதிக்கும் சொல்ல விரும்புகிறேன்.
தேர்தல் எப்படி இருக்கும்
அரசியலில் புகுந்ததில் இருந்து தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். கடுமையாக உழைக்கிறேன். திமுக காங்கிரஸ் நிச்சயமாக கூட்டணி அமைக்கும். ஊடகங்கள் தான் மோதல் என்கிற பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். எங்கள் கூட்டணி இணக்கமாக உள்ளது. மற்றவர்கள் நினைப்பது போல இல்லை. கூட்டணியில் குழப்பம் என பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்க ஒத்து வராது. 2021 சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தல் கடினமாக இருக்காது.
திமுக கூட்டணி தான்
நிறைய சாதனைகளை செய்திருக்கிறோம். அவற்றை மக்களிடம் எடுத்து சென்று வெற்றி பெறுவோம். எத்தனை கூட்டணி அமைத்தாலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். வளர்ச்சித் திட்டங்களை முன் வைத்து மக்களிடம் வாக்கு கேட்கிறோம். திமுக ஆட்சி அமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. எதையும் எதிர்பார்க்காமல் அரசியலில் முன்னேற வேண்டும். யார் காலிலும் விழக்கூடாது" என்றார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications