பேட்டி கொடுக்கறது தான் உங்க வேலையா.. கமலாலயத்தில் கண் சிவந்த பி.எல். சந்தோஷ்.. டரியலில் பாஜக சீனியர்கள்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பி.எல் சந்தோஷ், பேட்டி கொடுப்பது மட்டும் தான் கட்சிப் பணியா. உங்களை மட்டுமே முன்னிலைப்படுத்த கூடாது என்று சீனியர்களை கறார் மொழியில் எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதுவரை இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

பாஜக உள்கட்சி பிரச்சனை
திமுகவிடம் இருந்து ஆட்சியை பறிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழ்நாடு அரசியலை கண்காணிக்கிறார். மற்றொரு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் தமிழ்நாடு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் தொகுதி வாரியாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிங்காநல்லூர், காரைக்குடி, விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார். தந்தை உடல்நலத்தை காரணம் காட்டி அண்ணாமலை அந்தப் பதவியில் இருந்து விலகினார். இது பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பி.எல்.சந்தோஷ் காட்டம்
உள்கட்சி பூசல் காரணமாகத்தான் அண்ணாமலை பதவி விலகினார், பாஜகவில் மீண்டும் பிரச்சனை அதிகரிக்க தொடங்கியுள்ளது என்று கூறப்பட்டது. இந்த விவகாரத்தை பாஜக மேலிடமும் சாதாரணமாக கடக்கவில்லை. பாஜக நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை திநகரில் உள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பி.எல். சந்தோஷ் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய பி.எல் சந்தோஷ், "தமிழகத்தில் இன்னும் 65 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்து. முதல்கட்டமாக ஏப்ரல் முதல் வாரத்திலேயே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. சீனியர்கள் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்த கூடாது. சீனியர்கள் தொகுதிகளுக்கு சென்று, களத்தில் உள்ள நிர்வாகிகளை முன்னிறுத்த வேண்டும்.,. பேட்டி கொடுப்பது மட்டும் தான் கட்சிப் பணியா" என்று சீனியர்களை எச்சரித்துள்ளார்.
அமித்ஷா எச்சரிக்கை
தொடர்ந்து பேசிய பி.எல் சந்தோஷ், "பாஜக நிர்வாகிகளுக்குள் பிளவு இருக்க கூடாது. கூட்டணி உறவு பாதிக்கப்படும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். முக்கியமாக கூட்டத்தில் அண்ணாமலை குறித்து விவாதிக்கவும் அவர் தடை விதித்தார். தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கேட்டு பெறும். அதனால் போட்டி கடுமையாக இருக்கும்" என்று சந்தோஷ் கூறியுள்ளார்.
"சீனியர் நிர்வாகிகள் அனைவருமே தேர்தலில் களம் காண வேண்டியிருக்கும் என்கிற தகவலையும் அவர் சூசமாக கூறியுள்ளார். இதை தன்னுடைய ஆலோசனையாக மட்டுமே கருத வேண்டாம். இது அமித்ஷா ஜி யின் உத்தரவு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றும் அவர் பேசியுள்ளாராம். பி.எல் சந்தோஷ் பாஜக சீனியர்களை எச்சரிக்கும் தொனியில் கறாராக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications