சென்னையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 1458 ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 1458 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் இன்று 10584 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 266 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே சென்னையில் தான் கொரோனாவால் இன்று 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இன்று கடலூரில் 9 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசி அரியலூர்

தென்காசி அரியலூர்

கோவையில் 4 பேர், மதுரை, தென்காசி, அரியலூர், திருவள்ளூரில் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருவண்ணாமலை, கன்னியாகுமரி, செங்கல்பட்டில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 203 பேருக்கு

இன்று 203 பேருக்கு

சென்னையில் ஏப்ரல் 19ம் தேதி முதல் கொரோனாபாதிப்பு தொடர்ந்து அதிவேகத்தில் அதிகரித்து வருகிறது. சென்னையில் குறிப்பாக கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 174 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுத. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒரு நாளில் 203 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா மையம்

கொரோனா மையம்

சென்னையில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. சென்னை நகரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அண்மைக்காலமாக கொரோனாவின் மையமாக கோயம்பேடு மார்க்கெட் உருவெடுத்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் 146 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. கடலூர், அரியலூர், சென்னை அண்ணா நகர், திருவான்மியூர் பகுதிகளில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கொரோனா அதிக அளவு பரவி உள்ளது. ஏற்கனவே சென்னை பாடிகுப்பம் பகுதியிலும் கோயம்பேட்டில் இருந்து கொரோனா பரவி இருந்தது.

Recommended Video

    தமிழகத்தை குழப்பும் கொரோனா பேட்டர்ன்... என்ன காரணம்?
    தன்னார்வலர்

    தன்னார்வலர்

    சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா பரவி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை ஐஸ்அவுஸ் புதிய கிளஸ்டர் ஆக உருவெடுத்துள்ளது. ஐஸ் அவுஸ் பகுதியில் தன்னார்வலர் ஒருவர் மூலம் பலருக்கும் பரவி உள்ளது. ஐஸ் அவுஸ் பகுதியில் 52 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதனால் தன்னார்வலர்கள் தானாக முன்வந்து 10 நாளுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+