சென்னையில் ரேபிடோ காருக்கு காத்திருந்த 21 வயது பெண்.. டக்னு கட்டி பிடித்த நபர்! ஆடிப்போன பொது மக்கள்
சென்னை: ரேபிடோ காருக்காக அதிகாலையில் சாலையில் காத்திருந்தார் அந்த ஐ.டி. பெண் ஊழியர்.. அப்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பாக ஜார்க்கண்ட் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. எனினும் பாதிக்கப்பட்ட பெண் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நடந்த சம்பவம் என்ன தெரியுமா?
திருச்சியை சேர்ந்த அந்த இளம் பெண்ணுக்கு 22 வயதாகிறது.. சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

புத்தாண்டை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றிருந்த இந்த பெண், நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திரும்பி உள்ளார்.. புரசைவாக்கம் தாசபிரகாஷ் பகுதியை கிராஸ் செய்து, தான் தங்கியிருக்கும் இடத்துக்கு செல்வதற்காக செயலி மூலம் ரேபிடோ கார் புக் செய்தார்.. கார் வரும்வரை சாலையிலேயே காத்திருந்தார்.
கட்டிப்பிடித்து முத்தம்
அந்த நேரத்தில், அந்த வழியாக வந்த ஒரு நபர், இளம் பெண் தனியாக நிற்பதை பார்த்ததுமே அருகில் சென்று பேச்சு தர தொடங்கினார்.. பிறகு எதிர்பாராத விதமாக, இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் தந்துவிட்டார்.. இந்த பாலியல் அத்துமீறல் சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர், கத்தி கூச்சலிட்டார்..
அந்த சத்தத்தை கேட்டு, அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து வந்தனர்... அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து வைத்து, கடுமையாக தாக்கினார்கள்.. பிறகு இச்சம்பவம் குறித்து உடனடியாக கீழ்ப்பாக்கம் போலீசுக்கும் தகவல் தந்தனர்.. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடமிருந்து அந்நபரை மீட்டு,கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
ஸ்வீட் கடை டியூட்டி
அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், 35 வயதுடைய அந்நபரின் பெயர் பிரமோத் யாதவ்.. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவராம்.. கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மாஸ்டராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
டியூட்டி முடிந்து அதிகாலை வரும்போது தனியாக ஐடி பெண் ஊழியர் நின்றிருந்தாராம்.. சாலையில் யாரும் இல்லாததால் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தே பாலியல் தொந்தரவு செய்ததாக விசாரணையில் போலீசாரிடம் கூறி உள்ளார்.
பாத்ரூமில் வழுக்கி விழுந்து
இதையடுத்து, பெண் ஐடி ஊழியர் அளித்த புகாரின்படி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. கீழ்ப்பாக்கம் போலீசார் மேலும் விசாரணையை தீவிரமாக நடத்தி, சம்பவத்தில் தொடர்புடைய ஏதேனும் மற்றவர்களுக்கு உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் கைதான நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.. ஆனால் அவரிடம் இந்த விசாரணையை போலீசார் நடத்தி கொண்டிருக்கும்போதே, யாதவ் கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாராம்.. அப்போது "எதிர்பாராதவிதமாக" கீழே விழுந்து கையை உடைத்து கொண்டாராம் யாதவ்..!!
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications